தீயசக்திகளில் இருந்து விடுதலைதரும் வல்லமைமிக்கசெபம்.

1. நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்தசிலுவை! நீச பிசாசுகளை விரட்டி விடும் சிலுவை! சிலுவை அடியில் தலையை வைத்து இயேசுவின் இரத்தத்தை தெளிக்கிறேன். கடந்துபோ சத்துருவே!!!

2. அர்ச்சியசிஷ்ட சிலுவை ஐயற முத்திரை ஆணி அறைந்த தாழ்ப்பாள் கையிலிருந்து எடுத்து வீசுவேன்! ஓடிப்போ சத்துருவே!

3. குருசானகுருசே! கட்டுண்டகுருசே! காவலாய் வந்தகுருசே! தொட்டிரும் தண்ணீரும் சிங்காரமேடையும் துன்பப்படுத்தும் பேய்களையும் எங்களை அறியாமல் எங்களுக்குத் தீமை செய்பவர்களையும் துரத்திடும் சிலுவையே மூன்றாணி! மூன்றாணி!! மூன்றாணி!!!

4. தரிப்பான வாஞ்சனையாளரின் உடலைத் தசை தசையாய் முறிப்பாய்! முறிந்தபின் தீயிலிட்டு எரிப்பாய்! எரித்தபின் எல்லைமேவி வந்து எனக்கு அருள் புரிவாய் சம்மிக்கேல் என்னும் சேனாதிபதி நாமம் விருது கொண்டே!

5. வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் ஈரெட்டு பதினாறு கோணங்களிலும் இருந்து என் பேராலும் என் குடும்பத்தின் பேராலும் வரும் ஏவல் பில்லி சூனியங்களை இயேசுவின் இரத்தத்தால் சுட்டெரிக்கிறேன் ஆமென். (4 முறை சொல்லுங்கள்)

6. ஓ உன்னத யேசுவின் திருக்காயங்களே! ஓ உன்னத இயேசுவின் திரு இரத்தமே! என்னைக் கழுவி நிரப்பி அபிஷேகம் செய்து இருள் மருள் நோய் தீய சக்திகளிலிருந்து என்னை விடுவித்தருளும். ஆமென்.

7. இதோ ஆண்டவருடைய திருச்சிலுவை சத்துருக்களே ஓடி ஒழியுங்கள் யூதாகோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியும் வெற்றி கொண்டார். அல்லேலூயா! அல்லேலூயா!! அல்லேலூயா!!!

8. வியாகுலத்தாயே! உமது கண்ணீரும் உம் திருமகனுடைய இரத்தமும் தோய்ந்த போர்வையினால் எங்களை போதித்துக் காத்தருளும்.

ஆமென்.