குருமாருக்காகவும், சபையாருக்காகவும்

அற்புதங்களைச் செய்கிறவராகிய சருவவல்லமையுள்ள கடவுளே, உம்முடைய சுவிசேஷ ஊழியக்காரர் யாவர்மேலும், அவர்கள் விசாரணைக்கு ஒப்புவிக்கப்பட்ட எல்லாச் சபைகள் மேலும் சொஸ்தந்தரும் உமது ஆவி தங்கும்படி அனுப்பி அவர்கள் உமக்குப் பிரியமுள்ளவர்களாய் நடக்கும் பொருட்டு, உமது ஆசீர்வாதமாகிய பனி அவர்கள்மேல் ஓயாமற் பெய்யும்படி செய்தருளும். ஆண்டவரே, எங்களுக்காகப் பரிந்து பேசுகிறவரும் மத்தியஸ்தருமாகிய இயேசுகிறிஸ்துவின் மகிமை விளங்கும் பொருட்டு இப்படிச் செய்தருளும்.

ஆமென்.