உபவாசத் திருநாளன்று சொல்லத்தகும் செபம்.

எங்கள் நிமித்தம் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசம் செய்த கர்த்தாவே! உமது திவ்விய ஏவுதலுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து, மெய்யான நீதியும் பரிசுத்தமும் உள்ளவர்களாய் நடக்கும்படி, எங்கள் சரீரம் ஆவிக்கு அடங்கத்தக்கதாய் நாங்கள் உபவாசம் செய்வதற்கு எங்களுக்குக் கிருபை செய்தருளும்.

எங்களை இரட்சித்துக் கொள்ள நாங்கள் சக்தியற்றவர்களென்று அறிந்திருக்கிறீரே. சரீரத்துக்கு நேரிடும் எந்த உபத்திரவங்களும், ஆத்துமாவை விரோதித்துச் சேதப்படுத்தும் எந்தப் பொல்லாத நினைவுகளும், எங்களை அணுகாதபடி காத்தருளும்.

எங்கள் துர்க் கிரியைகளின் நிமித்தம் தண்டனைக்குப் பாத்திரராய் இருக்கிற எங்களுக்கு இரங்கி, உமது கிருபையால் வரும் ஆறுதலினாலே, எங்களைத் தேற்றி விடுதலையாக்க வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.

ஆமென்.