மழைக்காக செபம்

பரம பிதாவாகிய கடவுளே, உம்முடைய இராச்சியத்தையும் அதன் நீதியையும் தேடுகிற யாவருக்கும், சரீரத்தை ஆதரிக்க வேண்டியவைகளெல்லாவற்றையும் ஈவேனென்று உம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைக் கொண்டு வாக்குத் தத்தம் கொடுத்தீரே; எங்களுக்கு ஆறுதலும் தேவரீருக்கு மகிமையுமுண்டாகப் பூமியின் பலன்களை எங்களுக்குக் கிடைக்கும்படி, இப்பொழுது எங்களுக்கு உண்டாயிருக்கிற அவசியத்துக்குத் தகுதியான மழையை வருஷிக்கச் செய்ய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம்.

ஆமென்.