15. கானாவூர் கலியாணத்தில், தண்ணீரை இரசமாக்குதல்

வானவர் போற்றும் நாதா, வல்லபத்தாலே கானான். 
ஆனதோர் நகரில் மன்றல் ஆகுமவ்வீட்டிலே தான், 
பானமே குறைய ஆறு, பாத்திர மதனில் நீரைத் 
தான் (இ)ரசமாகச் செய்த, தற்பாரா அருள் செவீரே.