13. சீமோன் வீட்டில் இயேசு உணவுண்ணலும் மரிய மதலேனாள் பாதம் கழுவி தைலத்தால் பூசுதலும்

ஆதரை மீதி லிரா, அரிய சீஷர்களோடு, 
போதகர் சீமோன் வீட்டில், போசனப் பந்தி நேரம் 
மாதொரு கணிகை வந்து மலர் நறுந் தைலம் பூச
வாதுறும் தாசர்க்கோதும் வானவா அருள் செய்வீரே