சுருக்கமான இஸ்பிரீத்து சாந்து செபம்

திவ்ய இஸ்பிரீத்து சாந்துவே, தேவரீர் எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி, விசுவாசிகளுடைய இருதயங்களை இஸ்பிரீத்து சாந்துவின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அதே இஸ்பிரீத்து சாந்துவினால் நாங்கள் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.

ஆண்டவரே, நாங்கள் சரீரக் கற்புடனே உமக்கு ஊழியம் செய்யவும் இருதய சுத்தத்துடனே உமக்குப் பிரியப்பட நடக்கவும் உம்முடைய இஸ்பிரீத்துசாந்துவின் அக்கினியினால் எங்கள் இருதயம் பற்றி எரியவும் தயை செய்தருளும் சுவாமி. எங்கள் கிரியைகள் வார்த்தைகளெல்லாம் உம்மைக் கொண்டு துவக்கவும், உம்மிலே முடியவும் வேண்டியதாகையால், நாங்கள் அதைச் செய்கிறதற்கு முன்னமே உம்முடைய ஏவுதலைத் தந்தருளும். செய்யும் போது உமது உதவியைத் தந்து நடத்தும் ஆண்டவரே.

ஆமென்.