17. குரு நற்கருணையை உட்கொள்ளுகிறபோது...


பரம பிதாவுக்கு ஏக சுதனுமாய் நமது ஆண்டவருமாயிருக்கிற சேசுநாதர் மனிதாவதார மெடுத்து மனிதரை இரட்சிக்கும் பொருட்டாய்ச் சிலுவையில் அறையப்பட்டுக் கடின மரணத்தையடைந்து கல்லறையில் அடக்கப்பட்டாரென்று சிந்தித்துக்கொள்.

சுவாமி! இவ்வுலகத்துக்குச் செத்தவர்களாய் உமக்கு மாத்திரமே ஜீவித்திருக்கக் கிருபை செய்ய வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறோம்.

திருச்சபை மந்திரம் கிறீஸ்துவின் மரணத்தின் நினைப்பூட்டுதலுமாய், கிறீஸ்துவைத்தானே போசனமாய்க் கொள்ளுதலுமாய், இஷ்டப்பிரசாதத்தை ஆத்துமத்துக்குத் தந்தருளும்

சம்பூரணமாய், இனி அடையப்படும் மோட்ச சம்பாவனையின் அச்சாரமுமாயிருக்கிற அர்ச்சிக்கப்பட்ட விருந்தே! உமக்கே நமஸ்காரம்.

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய ஆண்டவரே! அடியேன் உள்ளத்தில் தேவரீர் எழுந்தருள நான் பேறு பெற்றவனல்ல.

தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம் பற்ற, என் ஆத்துமம் வியாதியினின்று விடுபட்டு ஆரோக்கியமடையும்.

கிறீஸ்துவினுடைய ஆத்துமமானதே செபம்.

ஆமென்.