பஞ்சகாலத்தில் ஜெபம்

எலிசேயு இறைவாக்கினரின் காலத்தில் சமாரியாவிலே கடும் பஞ்சத்தைச் சடுதியில் அகற்றி மலிவுண்டாகச் செய்தருளின இரக்கமுள்ள தந்தையே! எங்கள் பாவங்களின் நிமித்தம் தண்டனையாக வெகு துன்பப்படுகிற எங்களுக்கும் காலத்துக்குத் தகுந்த சகாயம் கிடைக்கும்படி இரக்கம் செய்தருளும். உமது பரம ஆசீரினாலே பூமி அதிக பலனைத் தரும்படி செய்து தேவரீர் தாராளமாய்க் கொடுக்கும் நன்மையைப் பெற்றுக்கொள்ளுகிற நாங்கள் உமக்கு மகிமையும் ஏழைகளுக்கு உதவியும் ஆறுதலுமாய் இருக்கத்தக்கதாக, அதை அனுபவிக்க எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.