தேர்வு எழுதுவோருக்காக ஜெபம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்குப் பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்.

எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள், இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம்.

ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.