© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மழைக்காக ஜெபம்.

தப்பில்லாத கிரமத்தோடு சகலத்தையும் நடப்பிக்கிற சர்வேசுரா! நாங்கள் பிழைக்கவும் நடக்கவும் இருக்கவும் காரணமான கர்த்தாவே! எங்களுக்குப் போதுமான மட்டும் ததிமாரி பெய்யவும், தவச தானிய முதலான சம்பத்துக்கள் ஓங்கி அதிகரிக்கவும் கிருபை செய்தருளும். நாங்கள் அதிக தார்ப்பரியத்தோடு நன்றியறிந்த தர்ம நெறியில் நடந்து உமக்குத் திருப்பணிபுரிந்து மோட்ஷ சம்பத்தை நாடி அடைய அனுக்கிரகித்தருளும் சுவாமி. இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும்.

ஆமென்.

புதிய மொழிபெயர்ப்பு:

எல்லாம் வல்ல இரக்கமுள்ள இறைவா! நாங்கள் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் உம்மிலேதான். எங்களுக்குத் தக்க காலத்தில் பருவமழை பொழியச் செய்தருளும். இதனால் நிலம் செழித்து நற்பயன் தரவும் நாங்கள் அனைவரும் வளமுடன் வாழவும் அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.