© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லூர்து அன்னையை நோக்கி செபம்.

அமலோற்பவ கன்னித் தாயே, சொல்லொண்ணா ஒளிக்கதிர் வீச தூய வெண்ணாடை அணிந்து, விண்ணுலக் அழகோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந் தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது பரிவிரக்கத்தை நினைத்தருளும். உம் திருமைந்தன் உமக்கு அளித்துள்ள மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும்.

புதுமையில் சிறந்த லூர்து மலை அன்னையே, உம் பேரறுபலன்களின் மீது  நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடிவந்தோம். கருணையும் அன்பும் நிரம்பிய மீட்பின் கருவூலங்களை இயேசு திறந்து அவற்றை எங்கள் மீது பொழிந்தருளச் செய்யும்.

உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பம் எதுவும் வீணாகிப் போகவிடாதேயும். மாசற்ற கன்னியான லூர்துமலை அன்னையே, நீர் எங்கள் தாயாராகையால், எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய் பரிந்துரைத்தருளும்.

ஆமென்.