ஆராதனைப் பிரகரணம் 5.

பரிசுத்த சிநேகத்தின் தேவதிரவிய அநுமானமாகிய நற்கருணையில் வீற்றிருக்கிற திவ்விய இயேசுவே! என் முழு மன நேசத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். பாவிகள் தேவரீருடைய பலிபீட சந்நிதானத்தில் முதலாய் நினைக்கத் துணிகிற சகல அசுசியான நினைவுகளுக்கும், வெட்கத்துக்குரிய துராசைகளுக்கும் பரிகாரமாக, நாதகிருத்தியருடைய பரிசுத்த ஆசைப் பற்றுதலையும், அவர்கள் தேவரீரைச் சிநேகிக்கும் அத்தியந்த நேசத்தையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.