ஆராதனைப் பிரகரணம் 3.

பூவாசிகளுக்கு சத்தியத்தைத் தெளிவிக்கிற நித்திய ஞானமாகிற இயேசுவே! அத்தியந்த தாழ்ச்சி விநயத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். அடியோர்கள் தேவரீருக்குத் துரோகம் செய்ததற்குக் காரணமான மனப் பொருத்த மூடத்தனமுள்ள அறியாமைக்குப் பரிகாரமாக, தேவரீரிடத்தில் மிகுந்த ஞானப்பிரகாசம் பெற்ற ஞானாதிக்ரென்னும் சம்மனசுக்கள் தேவரீரைப் புகழ்கிற மேலான தியானத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.