ஆராதனைப் பிரகரணம் 11.

குறையாத கருணா சமுத்தரமாகிய திவ்விய இயேசுவே! அடியேன் மிகவும் பாவியாயிருந்தாலும் உம்முடைய தயாளத்தை நம்பி உமது கிருபைச் சிம்மாசனத்தை அண்டித் தேவரீரை ஆராதிக்கிறேன். உமது திரு இருதயத்துக்கு ஏற்காத துரோகமாக உமதன்புள்ள தயவின் பேரில் ஐயப்பட்ட சில பாவிகளுடைய குருட்டாட்டமுள்ள அவநம்பிக்கைக்குப் பரிகாரமாக, அடியேன் பரிசுத்த பிதாப்பிதாக்கள் தேவரீருடைய வாக்குத்தத்தங்களில் ஊன்றி நின்ற திடனான நம்பிக்கையை தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.