இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆராதனைப் பிரகரணம் 10.

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் ஆனந்தமாகிய திவ்விய இயேசுவே! என் முழு இருதயத்தோடு தேவரீரை அபேட்சித்து ஆராதிக்கிறேன். தேவநற்கருணை மூலமாக உம்மோடு அனந்த இன்பமுள்ள ஐக்கியமாவதற்குத் தேவரீர் மனுமக்களை அழைக்கிற அன்புள்ள தயையை, அநேகர் புறக்கணித்து அசட்டை பண்ணுகிற அவமானத்துக்குப் பரிகாரமாக, தேவதூதர்களுடைய தீவிரமான கீழ்படிதலையும் அவர்கள் உமது கிருபையைப் பாராட்டுகிற நன்றியறிந்த தோத்திரங்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.