4. குரு பீடத்தின் முன்பாக நிற்கிற போது


குரு பீடத்தின் முன்பாக நிற்கிற போதும், பீடத்தின் இடது பக்கத்தில் ஒரு சின்ன ஜெபம் ஜெபிக்கிற போதும் பீடத்தின் நடுவிலே நின்று சுவாமி கிருபையாயிரும் என்கிற மந்திரத்தைச் சொல்லும்போதும்.

ஆதித்தகப்பன் பாவம் கட்டிக் கொண்ட பிறகு, சர்வேசுரனை அறிந்த புண்ணியாத்துமாக்கள் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபமாயிருந்து சர்வேசுரன் தங்கள் பாவங்களைப் பொறுக்க உலக இரட்சகரை அனுப்ப வேணுமென்று வேண்டிக் கொண்டார்களென்று சிந்தித்து நாமும் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபமாயிருந்து பாவசங்கீர்த்தன மந்திரத்தைச் சொல்லுவோம்.

சுவாமி கிருபையாயிரும் (3 விசை)
கிறிஸ்துவே கிருபையாயிரும் (3 விசை)
சுவாமி கிருபையாயிரும் (3 விசை).

ஆமென்.