குழந்தை இயேசுவை நோக்கி அர்ப்பண மன்றாட்டு.

இனிய குழந்தை இயேசுவே! உமது குழந்தைப் பருவத்தின் பேருண்மைகளை வியந்து, உம்மை ஆராதிக்கிறேன். உம்மை அன்புசெய்கிறேன்; உம்மை மகிமைப் படுத்துகிறேன்; என் மீது கொண்ட அன்பால் எனக்காக நீர் ஒரு சிறு குழந்தையாக பிறந்தீர். எனவே உமக்கு நன்றி கூறுகிறேன். அந்த அன்புக்குப் பதில் அன்பாக என்னை முழுவதும் உமக்குக் கையளித்து காணிக்கை ஆக்குகிறேன். இப்பொழுதும், என் வாழ்நாள் முழுவதும் உம் திருக்குழந்தைப் பருவத்தின் புண்ணியங்களை எனக்கு அளிக்குமாறு உம்மை இறைஞ்சிக் கேட்கிறேன். அன்புள்ள இயேசுவே! உமது தாழ்ச்சியையும், பிறப்பையும், கீழ்ப்படிதலையும், எளிமையையும் எனக்குத் தந்தருளும். உம்மை அன்பு செய்யவும், உம்மை பின்பற்றி நடக்கவும், வானகத்தில் உமது தெய்வீகத்தைக் கண்டுகளிக்கவும் உமது அருள் எனக்குத் துணை நிற்பதாக.

ஆமென்.