© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சதா சகாயமாதாவுக்குப் பிரார்த்தனை.

சுவாமி, கிருபையாயிரும் 2
கிறிஸ்துவே, கிருபையாயிரும் 2
சுவாமி, கிருபையாயிரும் 2

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர்திரு நாமம் உடைத்தான இடைவிடா சகாய மாதாவே, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் ஆபத்தான வேளையில் நான் அதனை ஜெயம் கொள்ளும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

எங்களுடைய முழுமனதுடன் சேசுவை நேசிப்பதற்கு, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக்கியத்துக்கு உள்ளாவேனாகில் அதினின்று தப்பி சீக்கிரம் எழுந்திருக்கும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

பசாசின் ஊழியத்தில் ஈடுபடும்படியான சகாத தளையில் நான் சிக்கிக் கொள்வேனாகில் அத்தளையை தகர்த்தெறியும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

தீவிர பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் சீக்கிரம் ஞான உஷ்ணம் கொள்ளும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களைப் பெறுவதிலும் கிறிஸ்தவப் பக்திக்குரிய கடமைகளைப் பக்தியாய் செய்வதிலும், எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

என் சீவியத்தில் வரும் துன்ப சோதனைகளிலும், எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

என்னுடைய சுபாவ துர்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், நன்னெறியில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும்படி நான் செய்யும் முயற்சிகளிலும், எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய்கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என்பலம் குறைந்து போகும்போது, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிட, நான் கடைசி மூச்சை வாங்கி, என் ஆத்துமம் என் சரீரத்தை விட்டுப் பிரியப் போராடும் போது, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, பூஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

ஓ! என் தேவதாயாரே என் கடைசிநாள பரியந்தம் என் கடைசி மூச்சு பரியந்தம், எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக.

சர்வ வல்லமையும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்குத் துணைபுரியும் வண்ணம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாவை உமது ஏகக் குமாரனுக்கு மாதாவாக்கத் திருவுளமானீரே! இவருடைய வேண்டுதலால், அடியோர்கள் பாவக் கொள்ளை நோயைத் தீர்த்து, பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதர் வழியாக எங்களுக்கு கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம்.

ஆமென்.