ஆன்ம வலிமைக்காக பரிசுத்த ஆவியிடம் செபம்.

என் ஆன்மாவைத் திருமுழுக்கினால் தூய்மையடையச் செய்த பரிசுத்த ஆவியே! என் இதயத்தை என்றும் உமக்கு ஏற்புடைய இல்லமாக்கியருளும். உறுதிபூசுதலின் வழியாக என் இதயத்தைத் திடப்படுத்திய பரிசுத்த ஆவியே! உலகம், உடல், அலகை ஆகிய என் ஆன்மாவின் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றும்

உலக சிற்றின்பங்கள் என் ஆன்மாவை சிறைப்பிடிக்காமல் என்னைப் பாதுகாத்தருளும். செபம், தவம் இவற்றில் நான் அன்றாடம் நிலைத்திருந்து, என் ஆன்ம எதிரிகளை வெற்றிகொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும். என் ஆன்மா இழந்து போன அருளை பாவ மன்னிப்பு என்னும் திருவருட்சாதனத்தின் வழியாகத் திருப்பிக் கொணரும் பரிசுத்த ஆவியே! என் பலவீனமான ஆன்மாவிற்கு வலுவூட்டி, பாவச் சேற்றில் என் ஆன்மா புதைந்து விடாதபடி என் ஆன்மாவைப் பாதுகாத்தருளும்

சோதனை வேளையில் என் ஆன்மாவின் பகைவரை வென்றிட எனக்கு ஆன்ம பலன் தாரும். பரிசுத்த கன்னி மரியாவின் பரிசுத்த உடலிலிருந்து இயேசுவின் திருவுடலை உருவாக்கிய பரிசுத்த ஆவியே! அத்தாயின் அன்பையும், தாழ்ச்சியையும் நான் பெற்று, நற்கருணையில் இயேசுவை வரவேற்க எனக்குத் துணையாக வரும். அதற்கேற்ப என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும்

விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஆகிய புண்ணியங்களில் நான் சிறந்து விளங்கி, என் வாழ்நாள் முழுவதும் உமக்கே சேவை செய்வதற்கு என் ஆன்மாவைத் தகுதியுடையதாக்கி அருளும்.

ஆமென்.