பரிசுத்த ஆவியாரிடம் தியான செபம்.

(... என்று புள்ளியிட்ட இடங்களில் மெளனமாக உங்கள் தேவைகளை குறிப்பிடுக)

பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவே! என் உயிரின் உயிரே! நான் உம்மைத் தொழுகிறேன்; வணங்குகிறேன்; உம் திருமுன் தாழ்ந்து பணிந்து நன்றி செலுத்துகிறேன். என் வேலைகளில் எல்லாம் (குறிப்பாக ... இல்) என்னை வழிநடத்தும். என் பலவீனங்களுக்கு எதிராக (குறிப்பாக ... எதிராகஎன்னைப் பலப்படுத்தும். என் தோல்விகளிலும், துன்பங்களிலும் ... எனக்கு ஆறுதல் அளித்து என்னை ஊக்குவித்தருளும். என் பாவங்கள் அனைத்திலிருந்தும் என்னை மீட்டு புனிதப்படுத்தியருளும். என் உடலிலும், உள்ளத்திலும் ஏற்பட்ட காயங்களை ... ) குணப்படுத்தியருளும். என்னைத் துன்புறுத்தியவர்களை நான் மன்னித்து அன்பு செய்ய ஆற்றலை அருளும் (...) என் தந்தையின் வழியில் என்னை வழிநடத்தும். என் மீட்பராம் இயேசுவை எனக்குக் காட்டியருளும். இறை வார்த்தையின் வழியாக என் இதயத்தையும், காதுகளையும் திறந்தருளும். செபத்தின் ஆவியை என்மேல் ஊற்றி செபிக்கும் முறையை கற்றுத் தாரும். மூவொரு இறைவா, உமது அன்பை நான் பிறரில் பிரதிபலிக்க எனக்கு உதவியருளும்.

ஆமென்.