குழந்தை இயேசுவின் மன்றாட்டு மாலை!

ஆண்டவரே இரக்கமாயிரும் – 2
கிருஸ்துவே இரக்கமாயிரும் – 2
ஆண்டவரே இரக்கமாயிரும் – 2

கிருஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் – 2
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும் – 2

வானகத் தந்தையாகிய இறைவா! எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

உலகை மீட்ட சுதனாகிய இறைவா! எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

பரிசுத்த ஆவியாகிய இறைவா! எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

தூய்மை நிறை மூவொரு இறைவா! எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

அற்புதக் குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

உண்மை இறைவனும், எங்கள் ஆண்டவருமான குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

எங்கள் எண்ணத்தையும், உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

எங்களுக்கு உதவிட என்றும் விரைந்து வரும் நன் மனமுடைய குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசிக் கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை அகற்றும் குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

எங்கள் வறுமையை ஒழிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

துன்புறுவோரை தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

உமது இரக்கத்தினால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

எங்களை திடபடுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட் கொள்ளும் குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

எங்கள் இதயங்களைக் கவரும் எழில்வதனமுள்ள குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

உமது கரத்தில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுடைய குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

ஆர்வமற்ற எம் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

எல்லா நன்மைகளாலும்,எம்மை நிரப்பி ஆசீரை அளிகின்ற அற்புத குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

உலகை எல்லா நலன்களாலும் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!

கருணை கூர்ந்து எங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே!

கருணை கூர்ந்து எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் குழந்தை இயேசுவே!

எல்லா பாவங்களிலிருந்து எங்களை மீட்டருளும் குழந்தை இயேசுவே!

அளவற்ற உம் நன்மைத்தனத்துக்கு எதிராக எழும் அவ நம்பிக்கையிலிருந்து எங்களை மீட்டருளும் குழந்தை இயேசுவே!

அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் சந்தேகத்திலிருந்து எங்களை மீட்டருளும் குழந்தை இயேசுவே!

உமது வழிபாட்டில் ஏற்படும் எவ்வித அலட்சியத்திலிருந்து எங்களை மீட்டருளும் குழந்தை இயேசுவே!

எல்லா வகைத் தீமையிலும் கேட்டிலுமிருந்து எங்களை மீட்டருளும் குழந்தை இயேசுவே!

உமது கன்னித்தாய் தூய மரியாள், உமது வளர்ப்புத்தந்தை தூய வளனார் இவர்களின் பரிந்துரை வழியாக உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

எங்களை நீர் மன்னிக்க வேண்டும்மென்று உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

உமது பால பருவத்தின்பால் எமக்குள்ள பத்தியையும், பரிவையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

அற்புத உம் திருக்கரம் எம்மை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

உமது திரு இதய அன்பில் எங்கள் உள்ளங்களை மென்மேலும் பற்றியெரியச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

எங்கள் நாடு அமைதிகாண அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

எல்லாத் தீமைலிருந்தும் எம்மை விடுவித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

உமது பக்தியில் நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

உமது அற்புதத் திருவுருவிலே எம் ஆறுதலாகவும் அடைக்கலமாகவும் நீர் இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

மரியன்னையின் மகனான இறைமகன் இயேசுவே. எங்கள் மன்றாட்டை கேட்டருளும் குழந்தை இயேசுவே!

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே! எங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே!

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் குழந்தை இயேசுவே!

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே! எங்கள் மேல் இரக்கமாயிரும் குழந்தை இயேசுவே!

வாக்கு மனிதரானார். நம்மிடையே குடி கொண்டார்.

ஆமென்.