© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் பிராத்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய அர்ச்சியசிஷ்ட பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பதுவைப் பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரமண்டல திருவின் திருப்பெட்டியான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூய்மையில் லீலிமலரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலருடைய கொழுந்தான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆச்சரியங்களைச் செய்கிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

காணமற்போனவைகளைக் காட்டிக்கொடுக்கிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தரித்திரருக்கு இரத்தினமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புண்ணிய மென்கிற ஞான வெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகம் என்கிற அபத்தைப் புறக்கணித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நன்நாக்கழியாத நற்தவத்தினரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புதுமைகளினால் பிரபல்யியமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்சபையின் தெளிவான தீபமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியை சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்சவிருந்து தந்தருள வேண்டுகிறோம்.

இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, பதுவைப் பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி! உமது ஸ்துதியரும் முத்திப்பேறு பெற்றவருமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது அர்ச்சியசிஷ்ட பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத்தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும்.

ஆமென்.