இயேசுவே எனக்கு உதவியருளும்... வல்லமை மிக்க செபம்.

* என் ஒவ்வொரு தேவைகளின்போதும் தாழ்மையுடன், நம்பிக்கையுடன் உம்மிடம் வர இயேசுவே எனக்கு உதவியருளும்.

* என் சந்தேகங்களில், கலக்கங்கள், சோதனைகளில் இயேசுவே எனக்கு உதவியருளும்.

* என் நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், துன்பங்கள் வேதனைகளில் இயேசுவே எனக்கு உதவியருளும்.

* மற்றவர் என்னை ஏமாற்றும்போது உம்மை மட்டும் நம்பியிருக்கும் எனக்கு இயேசுவே உதவியருளும்.

* நீரே என் ஆண்டவர், மீட்பர் என நான் வரும்போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

* என் வாழ்வில் எல்லா முயற்சிகளுமே தோல்விகளாக மாறும்போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

* நான் பொறுமையிழந்து என் சிலுவைகள் துன்பத்தின் மீது துன்பத்தைத் தரும்போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

* நான் தனிமையில் வருத்தத்திலும் வேதனைகளிலும் உழலும்போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

* எப்போதும் எனது பலவீனங்கள் தோல்விகளின்போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

ஆமென்.

குறிப்பு: இச்செபம் வல்லமை மிக்கது, உங்கள் வேண்டுதல் எவ்வளவு கஸ்டமானதாக இருந்தாலும் இச் ஜெபத்தின் மூலம் அடையலாம். மாதத்தின் முதல் வெள்ளியிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு இச்செபத்தை செபிக்கவும்.