தேவ மாதாவின் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்ச்சிய சிஷ்ட கன்னிகையே,

கிறீஸ்துவினுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருச்சபையினுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பழுதற்ற கன்னியாஸ்திரியாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னி சுத்தங் கெடாத மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆச்சரியத்துக்குரிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நல்ல ஆலோசனை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிருஷ்டிகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இரட்சகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா புத்தியுடைத்தான கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சக்தியுடையவர்களாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தயையுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசுவாசியாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தருமத்தினுடைய கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞானத்துக்கு இருப்பிடமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் சந்தோஷத்தினுடைய காரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞான பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகிமைக்குரிய பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா என்கிற புஷ்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாவீது ராஜாவுடைய உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தந்தமயமாய் இருக்கிற உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சொர்ணமயமாய் இருக்கிற ஆலயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வாக்குத்தத்தத்தின் பெட்டியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோகத்தினுடைய வாசலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விடியற்காலத்தின் நட்சத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்தவர்களுடைய சகாயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சம்மனசுக்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப்பிதாக்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதசாட்சிகளுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஸ்துதியர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மோட்சத்திற்கு ஆரோபணமான இராக் கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருச்செபமாலையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குடும்பங்களின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமாதானத்தின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சரணமாக ஓடி வந்தோம்.  எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும்.  ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய், மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே, சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத் தருளும்.  ஆமென்.

சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக் குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களா யிருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சுவாமி!  முழுமனதோடே தெண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னிகையான முத்திப் பேறு பெற்ற மரியாயுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயைசெய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி

ஆமென்.