உத்தரிக்கும் ஸ்தலம் -9 :

புனித தந்தை பாத்ரே பியோவின் அனுபவங்கள்

“ ஓ.. சில ஆன்மாக்களிடம் பேசிக்கொண்டிருந்தேன் அவ்வளவுதான் ! “

ஒரு நாள் பாத்ரே பியோ தீடீரென்று மேஜையிலிருந்து எழுந்து போய் யாரிடமோ பேசுவது போலப் பேசத் தொடங்குவதை சில துறவிகள் கண்டார்கள். ஆனால் அவர் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அவர்களால் உணர முடியவில்லை. பாத்ரே பியோவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று கூட அவர்கள் நினைத்தார்கள். எனவே அவர் யாரிடம் பேசிக்கொண்டிருக்றார் என்று அவர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறு மொழியாக, “ ஓ.. அது ஒன்றுமில்லை. நான் சில ஆன்மாக்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மோட்சத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். இன்று காலையில் என் பூசையில் நான் அவர்களை நினைவு கூர்ந்தேன் என்பதால் எனக்கு நன்றி சொல்ல அவர்கள் இங்கே வந்தார்கள் “ என்றார்.

“ என் பூசை காண இந்த மலைமேல் ஏறிவரும் உயிருள்ள மனிதர்களை விட, என் ஜெபங்களைக் கேட்பதற்காகவும், என் பூசையில் பங்கு பெறவும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து இறந்தவர்களின் ஆன்மாக்கள் நிறைய வருகிறார்கள் “ என்று தந்தை பியோ ஒருமுறை கூறினார்.

ஒருமுறை ஒருவர் தந்தை பியோவிடம் உத்தரிக்கிற ஸ்தலத்தை தவிர்ப்பது எப்படி என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்,

“ கடவுளின் கரங்களிலிருந்து வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் அதைத் தவிர்க்கலாம். அன்போடும், நன்றியறிதலோடும், அனைத்தையும் அவருக்கு ஒப்புக்கொடுப்பது, நம் மரணப்படுக்கையிலிருந்து நம்மை நேராக மோட்சம் செல்ல நமக்கு உதவும் “

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு சகோ.பால்ராஜ் Ph: 9487609983, சகோ.ஜேசுராஜ் Ph: 9894398144

சிந்தனை : ஒரு சராசரி கிறிஸ்தவனாக வாழ்ந்தாக் கூட நாம் மோட்சம் போய் விடலாம். 

1. மாதம் ஒருமுறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் மனஸ்தாப உள்ளத்தோடு செய்வது.

2. பாவங்களையும், பாவ சந்தர்ப்பங்களையும் தவிர்ப்பது

3. வாரம் ஒரு முறையாவது திருப்பலியில் தகுதியான உள்ளத்தோடு திவ்ய நற்கருணை ஆண்டவரை உட்கொள்வது

4. நமக்கு வரும் துன்பங்கள், நோய்கள், அசவுரியங்களை அமைந்த மனதுடன் முனுமுனுக்காமல் ஏற்றுக்கொள்வது. நோய்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். ஆனால் குணமாகும்வரை உள்ள வேதனைகளை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்..

5. தினமும் ஒரு ஜெபமாலையாவது குடும்பத்தோடு அமர்ந்து ஜெபிப்பது..

6. பிறரை நேசிப்பது..நம்மால் முடிந்த தானதருமங்கள் செய்வது..

சராசரி என்று சொல்லிவிட்டு அசாதாரனமானதை சொல்கிறேன் என்று நினைத்தால் மாதம் ஒருமுறையாவது பாவசங்கீர்த்தணம் செய்ய வேண்டும்.. நம்முடைய அன்றாட சிலுவைகளை முனுமுனுக்காமல் ஏற்றுக்கொண்டு நம் பாவங்களுக்காகவும், பிறர் பாவங்களுக்காகவும் ஒப்புக்கொடுப்பது. வாரம் ஒருமுறையாவது தகுதியான உள்ளத்தோடு திவ்ய பலி பூசையில் பங்கேற்று நம் ஆண்டவரை உட்கொள்வது.. தினமும் ஒரு பத்து மணிகளாவது நம் தேவ அன்னையிடம் நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்பது…

சராசரி கிறிஸ்தவம் நம்மை நல்ல கிறிஸ்தவத்திற்கு அழைத்துச் செல்லும்.. நல்ல கிறிஸ்தவம் நம்மை புனித கிறிஸ்துவத்திற்கு அழைத்துச் செல்லும்.. மொத்தத்தில் நாம் நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவனாக/ளாக அதற்குரிய கடமைகளைச் செய்தாலே.. உத்தரிக்கும் ஸ்தலம் செல்லாமல் பைபாஸ் வழியாக மோட்சம் போய்விடலாம்…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !