ஜுன் 27

அர்ச். லடிஸ்லாஸ். இராஜா (கி.பி. 1095) 

இராஜ குமாரனான லடிஸ்லாஸ் சகல சுகமான செல்வங்கள் நிறைந்த இராஜ அரண்மனையில் வளர்ந்த போதிலும் அவைகளை அனுபவிக்காமலும் அவைகளின் மீது பற்றுதல் வைக்காமலும் ஒரு துறவியைப் போல புண்ணிய வழியில் கவனமாக நடந்து வந்தார்.

இளம் வயதிலேயே அவர் கற்பு, தாழ்ச்சி, பொறுமை முதலிய புண்ணியங்களை கடைப்பிடித்து வந்தார். இவர் உலகக் கீர்த்தி, வெகுமானம் முதலியவை வீண் என்று எண்ணித் தமக்கு கிடைக்க விருந்த ஹங்கேரி தேசத்து இராஜ பட்டத்தை விரும்பாமல் வேறொரு பிரபுவுக்கு அது கிடைக்கும்படி முயற்சி செய்தார்.

ஆயினும் அத்தேசத்தா ருடைய கட்டாயத்தினிமித்தம் அவர் அத்தேசத்திற்கு இராஜாவானார். தர்ம இராஜாவான லடிஸ்லாஸ் உத்தம் சட்டங்களை ஏற்படுத்தி அத்தேசத்தைப் பரிபாலித்து, பாவம் அழிந்து புண்ணியம் செழித்தோங்கும்படி முயற்சித்தார்.

அவ்வாறே அத்தேசம் மற்றத் தேசங்களைவிட இப்புண்ணிய அரசனுடைய ஜெப வேண்டுதலால் புண்ணிய நாடாகி லெளகீக நன்மையிலும் அபிவிருத்தியடைந்தது.

இவர் ஒருசந்தி உபவசாம் பிடித்து இரத்தம் வரத் தம்மை அடித்துக் கொண்டு, வெகு நேரம் ஜெபம் செய்து, தரையில் படுத்து, ஒரு நாளைக்கு அநேக பூசைக் கண்டு, அடிக்கடி மகா பக்தியுடன் தேவநற்கருணை உட்கொண்டு, தேவதாயார் மீது அதிசயத்திற்குரிய பக்தி வைத்து அர்ச்சியசிஷ்ட வராய் நடந்து வந்தார்.

அத்தேசத்தார் இப்புண்ணிய அரசனை ஒரு தகப்பனைப் போல் நேசித்து புண்ணியவானாய் காலஞ் சென்ற தங்கள் நல்ல அரசனுக்காக மூன்று வருட காலமாக அழுது துக்கங் கொண்டாடினார்கள்.

யோசனை 

இவ்வுலக நன்மைகளும் பெயர் பெருமையும் வீணிலும் வீணென்று எண்ணுவோமாக

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஜான், கு.