இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிரியாத உறவே என் இயேசுவே ***

பிரியாத உறவே என் இயேசுவே - உன்
பீடத்தில் பலியாக என்னைத் தந்தேன்

1. எனக்காக உம்மை பலியாகத் தந்தீர்
அதற்காக என்னைப் பரிசாகத் தந்தேன்
உணவாக உம்மை விருந்தாகத் தந்தீர்
உணர்வோடு என்னை உமக்காகத் தந்தேன்

2. நிலையான அன்பை நீர் தாமே தந்தீர்
நிழலாக என்னைத் தொடர்ந்தே வந்தீர்
நீயின்றி என்னில் மகிழ்வேதும் இல்லை
நின்பாதம் என்னை முழுதாகத் தந்தேன்