இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எடுத்து வந்தோம் காணிக்கையை ***

எடுத்து வந்தோம் காணிக்கையை
இறையமுதே உம்மை சூழவந்தோம்
இனிதாகவே எம்மை ஆளவே
இதை ஏற்பாய் என்றே வேண்டுகின்றோம்

1. வாழ்வும் உமதே தாழ்வும் உமதே
வையத்தில் படைத்ததெல்லாம் உமதே
எம் சிறு வயதில் நிகழ்வதெல்லாம்
உம் திருப்பலியாய் மாற்றிடுமே

2. கடைநிலை வாழ்வோர் கடமையை மறந்தோர்
கடவுளை உணர்ந்தே வருகின்றார்
கருணையின் இறைவா கண் பாரும்
திருப்பலி வாழ்வை எமக்கருளும்