இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரி யேக நாதனுக்கு சுபமங்களம் ***

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம் 
பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு

1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு

2. மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு

3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் 
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு,
பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு