இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தாவீதின் குலமலரே ஒளி தாங்கிடும் அகல்விளக்கே

தாவீதின் குலமலரே - ஒளி
தாங்கிடும் அகல்விளக்கே - எமைக்
காத்திடும் ஆரணங்கே - அருள்
சுரந்திடும் தேன்சுனையே

1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்
கறை சிறிதில்லாக் காத்திருந்தார்
மறையவர் புகழும் மாமணியே
கரை சேர்ப்பதுவே உன் பணியே

2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே
நற்கனி சுதனை எமக்களித்தாய்
கற்றவர் மற்றவர் யாவருமே
பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா