சிலுவைப் பயணம்:

மனித உடல்  ஆறடி மண்ணுக்கு மட்டும் தான் சொந்தம்!
மரச்சிலுவையோ மனிதர் அனைவருக்கும் சொந்தம்!
இது இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தால் வந்த சொந்தம்! 
இயேசு கிறிஸ்து சந்தித்த வேதனைகளால் வந்த பந்தம்! 
எந்தையும் தாயையும் விட பேரன்பு கொண்ட இந்த சொந்தம்!
சிந்திக்கவும் செயல்படவும் அழைக்கிறது நம்மை! 
சிறகுகள் இல்லை பறப்பதற்கு  சிலுவைகள் மட்டும் இருக்கின்றன சுமப்பதற்கு! சுமக்க தயாரா?

அவ்விடத்தை அடைந்ததும் அவர்களை நோக்கி, 'சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்' என்றார். பின்னர், அவர்களை விட்டுக் கல்லெறி தொலைவு சென்று முழங்காலிலிருந்து,  'தந்தையே, உமக்கு விருப்பமானால், இத்துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும் எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்' என்று செபித்தார். அப்போது வானதூதர் ஒருவர் அவருக்குத் தோன்றி, அவரைத் திடப்படுத்தினார்.

கொடிய வேதனைக்குள்ளாகவே, மேலும் உருக்கமாய்ச் செபித்தார். அவருடைய வியர்வை பெரும் இரத்தத் துளிகளாக நிலத்தில் விழுந்தது. லூக்காஸ் 22:40-44 & மாற்கு 14:32-42 & மத்தேயு 26:36-46. 

இயேசு தமது பாடுகள் / மரணம் குறித்து முன்று முறை முன்னறிவிப்பு செய்து இருந்தும் மத்தேயு 17:21-23 & 18:22-23 & 20:17-19 மாற்கு 8:31-33 & 9:30-32 & 10:32-34 லூக்காஸ் 9:22, 44-45 & 18:31-34 

இயேசு கெத்சேமனித் தோட்டத்தில் தனது சிலுவை பாடுகளின் கொடுமையின் பொருட்டு கலக்கமுற்றார் என்பதை பார்க்கும் போதும், 

 மூன்று மணிக்கு இயேசு, 'எலோயி, எலோயி, லாமாசபக்தானி' என்று உரக்கக் கூவினார். இதற்கு, 'என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்பது பொருள். மாற்கு 15:34 & மத்தேயு 27:46 இயேசுவின் இந்த இறுதி வார்த்தையின்  வீரியத்தை பார்க்கும் போதும் இயேசு கிறிஸ்து நமது பாவங்களின் பொருட்டு அனுபவித்த சிலுவைப் பாடுகள் எவ்வளவு கொடுமையானதாக இருந்து இருக்கும் என்பதை உணர முடிகிறது அல்லவா!!

இயேசுவின் இந்த சிலுவைப் பாடுகள் நமது சிந்தனை, செயல்களால் செய்யும் பாவங்களில் இருந்து மீட்டு நித்திய வாழ்வை அளிக்கவே என்பதை உணர்ந்து இயேசுவின் பாடுகளில் நமும் பங்கேற்க முயல்வோம். ஏனென்றால் நமது குற்ற செயல்களால் நாமும் இயேசுவை தீர்ப்பிட்டு சாட்டையால் அடித்து மூள்முடி சூட்டி காரி உமிழ்கிறோம். இயேசுவின் மீது சிலுவையை சுமத்தி அவரை நிர்வாணம் செய்து ஆணிகளால் அடிக்கிறோம் அல்லவா!!!!