இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததைத் தரவந்தேன் ***

வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததைத் தரவந்தேன்
காலடி பணிந்து முன்னே காணிக்கை தருகின்றேன்
கருணை பொழிந்து எம்மை ஏற்பாய்

1. திறந்த மனதுடன் பரந்த அன்புடன்
பகைவரை ஏற்றுக்கொண்டேன்
நிறைந்த மகிழ்ச்சி கண்டேன் அது
மன்னிப்பில் எழக் கண்டேன்
சிறந்த மனிதனாய் வாழ்ந்திட நினைத்தேன்
முயற்சியை தருகின்றேன்
பிறந்தேன் எனக்குள் தன்னலம் அழித்து
அதனைக் கொண்டு வந்தேன் - நான்

2. மரமாய் வளர விதையும் தன்னை
அழிக்கும் நிலை கண்டேன்
உரமாய் ஆகிவிட்டேன் பிறர்
வாழ்ந்திட எனைக் கொடுத்தேன்
பரமே உந்தன் கரமாய் இணைந்து
பலியினை தருகின்றேன்
சிரமே பணிந்தேன் அன்பில் மனிதனாய்
என்னை மாற்றிடுவாய் நீ என்னை மாற்றிடுவாய்