இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அம்மா மரியே சரணம் ஆரோக்கியத்தாயே சரணம் ***

அம்மா மரியே சரணம்
ஆரோக்கியத்தாயே சரணம்

1. மங்கல மணிவிளக்கே சரணம்
மாந்தரில் மாணிக்கமே சரணம்
பெண்களில் சிறந்தவளே சரணம் - எம்
பெருமான் இயேசுவின் தாயே சரணம்

2. தாழ்ச்சியில் உயர்ந்தவளே சரணம்
தியாகத்தின் காவியமே சரணம்
மாட்சியை அடைந்தவளே சரணம் - எம்
வாழ்வின் நல்மாதிரி நீயே சரணம்