இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தாரகை சூடும் மாமரியே தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய்

தாரகை சூடும் மாமரியே
தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய்

1. தேவனை உலகுக்கு அளித்தவளே
தேடிய துணையைக் கொடுப்பவளே
வாடிய மகவை அணைப்பவளே
வாழிய ஞானியர் காவலியே

2. தென்னகக் கன்னி கடலலையும்
பன்னெழில் இமய மாமலையும்
மென்னெழில் எமது தாயகமும்
உன் புகழ் பணிந்தே பாடாதோ