இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சகாயத்தாயே எங்கள் சந்தோஷம் நீயே சதா எம்மைத் தேற்றுகின்ற தேவனின் தாயே

சகாயத்தாயே எங்கள் சந்தோஷம் நீயே
சதா எம்மைத் தேற்றுகின்ற தேவனின் தாயே
உம்மை மன்றாடி நலம் அடைந்தோம்
கொண்டாடி நன்றி பொழிந்தோம்

1. மாதா நீ ஈன்ற இயேசு எங்கள் தெய்வம்
நீதான் அவர் சொன்ன யாவும் செய்த நெஞ்சம்
மரியே மாமரியே எங்கள் நல்மாதிரியே
எம்மையுன் பிள்ளைகளாய் அரவணைத்தாயே

2. அம்மா உன் பாதம் வீழ்ந்து கிடக்கும் மலர்கள்
அன்பும் நிம்மதியும் வேண்டும் எங்கள் மனங்கள்
உன்னையே சரணடைந்தோம் உன்னருள் கரம் விழைந்தோம்
இன்னலில் இடராமல் நல்வழி நடக்க