அவர்கள் சிறுவர்களாய் இருக்கும்போதே கடவுளைப்பற்றிய ஞானத்தை அவர்களுக்கு போதிக்க வேண்டும். பைபிள் கதைகள், புனிதர்கள் வரலாறு, நம் ஆண்டவர் இயேசுவைப்பற்றிய அறிவை பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும். முக்கியமாக ஜெபிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
இப்போதெல்லாம் வசதி உள்ள பெற்றோர்களும், சில பெற்றோர்களும் ஆலய வழிப்பாட்டின் போது ஆலயத்தின் முன்னால் அனுப்பாமல் தங்களுடனே வைத்துக்கொள்கிறார்கள். ஜெபமாலை ஜெபிக்கப்படும்போதும், வேறு ஜெபங்கள் சொல்லும் போதும் பிள்ளைகள் வாய்களைத் திறப்பதில்லை.
பெற்றோர்களும் அதைக்கண்டுகொள்வதில்லை. திருப்பலியின் போதும், ஜெபங்களின் போதும் அவர்கள் பதில் சொல்லாமல் தங்கள் சகோதர சகோதரியிடம் பேசிக்கொண்டும், சிலர் தங்கள் பெற்றோர்களிடம் பேசிக்கொண்டும், விளையாண்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகள் கடவுளைப்பற்றிய பயமும், ஞானமும் இல்லாமல் ஒரு விதமான உலகப்போக்கோடு வளர்வார்கள். பிற்காலத்தில் ஆலயத்திற்கு செல்லவே மாட்டார்கள். பக்தி ஒரு சதவீதம் கூட இருக்காது.
அதே பெற்றோர்கள், பிள்ளைகளை டியூசனுக்கு அனுப்புவதில், அவர்களின் மற்ற திறமைகளை வளர்க்கும்போது இசை, விளையாட்டு, நீச்சல் என்று உலகம் சார்ந்த விசயம் படிப்பு சார்ந்த விசயத்தில் அதிக அக்கரையும், கண்டிப்பும் காட்டுகிறார்கள். ஆனால் ஆண்டவர் விசயத்தில் அக்கறையற்ற நிலை. கடமைக்கு ஆலயம் செல்லுதல். இப்படி பிள்ளைகளை வளர்த்தால் நாளை அவர்கள் எப்படி இருப்பார்கள்.
ஆன்மீக விசயத்தில் அசட்டையான அதே பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து அவர்களை பலவீனர்களாக வளர்க்கும் அதே பெற்றோர்கள் நாளை ஆண்டவரின் முன்னால் அதே பிள்ளைகளால் குற்றம் சாட்டப்படுவார்கள்.
“ ஆண்டவரே நான் இந்த அளவு கூனி,குருகி உம் முன்னால் பாவியாக நிற்பதற்குக் காரணம் எனக்கு நீர் கொடுத்த பெற்றோர்களே காரணம். அவர்கள்தான் உம்மைப்பற்றி அறிவிக்கவில்லை. உம்மைப்பற்றி எனக்கு தெறிந்திருந்தால் நான் இந்த நிலமைக்கு வந்திருக்க மாட்டேன். ஆகையால் முதலில் என் பெற்றோரைத்தூக்கி நரகத்தில் போடுங்கள் “ என்பார்கள்.
எப்படிப்பட்ட வார்த்தைகள் இது. இன்று அதிகாமாக செல்லம் கொடுத்து கொடுத்து பெற்றோர்களே ! குழந்தைகளின் ஆன்மாக்களை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று வருகிறார்கள். இந்த நிலை மாறவேண்டுமானால், பெற்றோர்கள் முதலில் பெயரளவிற்கு என்று இல்லாமல் நம் ஆண்டவரான இயேசுவின் உன்மையான விசுவாசம் வைத்து தாங்கள் குடும்பமாக அமர்ந்து தினமும் ஜெபிக்கவேண்டும் அதிலும் குடும்ப ஜெபமாலை ஜெபித்தே ஆக வேண்டும்.
பெற்றோர்களே விழிப்பாயிருங்கள் ! இல்லையென்றால் “ உங்களுக்கு ஐயோ கேடு.”
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠