இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாத்திமா காட்சிகள் - அங்கிகாரம்

Phone: 71102
ARCHBISHOP’S HOUSE
San Thome, Madras - 600004.
24 July 1976  

Dear Father Fernando,

In connection with your printing and publishing a book on Our Lady of Fatima, I wish to say that this work of yours is indeed most timely and necessary.  The Message of Our Lady of Fatima, we see, has not been sufficiently heeded. That is at the bottom of all our troubles today - in the Church and outside.

May your effort help people once again to think seriously of this important message to the Church and to the world, and reform their lives.  May Our Lady bless you and your work.

Yours devotedly in Our Lord
R. ARULAPPA
Archbishop of Madras & Mylapore.
--------------------------------------------------------------------------------------------------------------------------
பேராயர் இல்லம்,
மதுரை - 625008.
9-5-1976.

நீங்கள் வெளியிடப் போகும் “பாத்திமா காட்சிகள்” என்ற நூல் நம் தமிழ் மக்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன்.  உலகம் அழிவின் பாதையில்  சென்று கொண்டிருக்கும் போதெல்லாம் மாதா காட்சியளித்து, மக்களை எச்சரித்திருக்கிறார்கள்.  இக்காலத்தின் அழிவைத் தடுப்பதற்காகவும், மாதா ஏற்கெனவே எச்சரித்திருந்தாலும், மக்கள் இன்னும் அதை உணர்ந்தாகத் தெரியவில்லை.  நீங்கள் வெளியிடும் இந்நூல் மூலம் நம் தமிழ் மக்கள் விழித்தெழுந்து, மாதா கூறும் நல்வழியில் ஒழுகி, உலகின் சீர்கேட்டுக்கு ஒரு மாற்று மருந்தாய் உதவுவார்களாக.  பாத்திமா மாதாவின் பக்தியைப் பரப்புவதில் நீங்கள்  செய்து வரும் அரும்பெரும் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

நம் ஆண்டவரின் அருளும், மாதாவின் அன்பும் என்றும் உங்களோடிருப்பதாக.

இப்படிக்கு,
P.J. DIRAVIAM,
மதுரைப் பேராயர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
Phone: 2033
ARCHBISHOP’S HOUSE
Pondicherry - 605001.
Date: 7-5-1976

Dear Rev. Father,

I am happy to know that on the 13th May, Feast of Our Lady of Fatima, you will be bringing out the Book on Fatima Apparitions in Tamil.             I congratulate you for this good work and wish and pray that this book will be read by our people and they will spiritually benefit by the message of the Apparitions at Fatima.

God bless you.

Yours devotedly in Christ,
V.S. SELVANATHER
Bishop of Pondicherry.
--------------------------------------------------------------------------------------------------------------------------
Phone: 20035
BISHOP’S HOUSE
Tuticorin - 628 001.
21.5.1976  

பாத்திமா அன்னையின் மகிமைக்காக வெளிவந்துள்ள “பாத்திமா காட்சிகள்” என்னும் இந்நூலினை பக்தர்கள் அனைவரின் பெயரால் வரவேற்கிறோம்.  பாத்திமா அன்னையின் காட்சிகளை சரித்திர ஆதாரத்துடன் எடுத்துக் கூறி, அன்னை இவ்வுலகுக்கு விடுத்த செய்தியினை மக்களின் மனத்திலே பதிய வைக்கும் பாணியிலே எழுதப்பட்ட நூல்.  பாத்திமா அன்னையின் பக்தர்கள் அனைவரும் வரவேற்கத் தக்க ஒரு கையேடு.

பாத்திமா அன்னையின் பக்தியினைப் பரப்ப வழிவிடுக்கும் இந்நூலினைத் தமிழிலே மொழிபெயர்த்துத் தந்த அருள் தந்தை அவர்களையும், அச்சிட்டு வெளியிட்ட வள்ளியூர் பாத்திமா ஆலயத் தந்தை அவர்களையும் பாராட்டுகின்றோம்.  அனைவரும் படித்துப் பயனுற வேண்டும் என வாழ்த்துகின்றோம்.  பாத்திமா அன்னையின் ஆசியும், சமாதானமும் அனைவரோடும் இருப்பதாக.

இவண்
M. AMBROSE
தூத்துக்குடி ஆயர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
SACRED HEART COLLEGE
SHEMBAHANUR - 624104.
11-5-1976.

Dear Rev. Father,

P.C.

I am very happy to learn that you are bringing out a book in Tamil, describing in full details, the apparitions of Our Lady at Fatima.  Those miraculous events and the messages they convey have lost none of their vital importance and significance for the men and women of our generation.

In 1917, Our Lady of Fatima had called for prayer and penance so as to halt the inroads of atheism and Communism.  Her maternal warning was not sufficiently heeded; and a         second world war broke over the world, ravaging whole countries and scattering death and destruction in its wake.

Has Communism been checked?  Like a giant Octopus,  it continues to throw its aggressive tentacles around, gripping now South Vietnam, now Angola, ever on the prown for fresh prey.

And in the traditionally Catholic countries, we find a deplorable decline of faith and piety, a babel of discordant voices, a rejection of established authority even of God’s  supreme dominion;  instead of that, a godless, materialistic trend forges ahead heralding, it would seem, the apocalyptic age of the Antichrist.

There is sure need for divine intervention, for a God appointed messenger of peace;  and the messenger, in God’s merciful designs, is none other than the Mother of Jesus, Prince of peace, and mother of men Herself.  Her tender Heart feels for all Her children in their fear and distress and is always prepared to exercise her powerful intercession on their behalf.

But She wishes to renew in them those dispositions of faith and trust, fed on fervent prayer and sincere repentance, which are sure to appeal strongly on God’s own Heart.  She is ready to back our pleading with Hers, to support our repentant love by Her virginal love.

Let us, then, invoke Our Lady, Help of Christians.  Let us, like the old, have recourse to Our Lady of the Rosary; as at Lepanto, as at Vienna, She will display Her power, break and scatter the forces of evil and bring back the Rule of justice, charity and peace among men.  Ad Jesum per Mariam.

Wishing you God’s blessings on your work and Mother Mary’s sweet encouragement.

Yours devotedly in Christ,
J.P. LEONARD.
------------------------------------------------------------------------------------
BISHOP’S HOUSE
P.B. No.204
Thanjavur - 613007.
(South India)
Date : 7th May 1976.

I am happy to know you are bringing out a new book entitled “FATIMA APPARITIONS.”  You have done much in the past by your publications to propagate special devotion to our Lady of Fatima and to make the people listen to the Message given at Fatima regarding prayer and penance.

I wish that your new book will do great good among the Christians and non-Christians alike.

Yours devotedly in Christ,

--------------------------------------------------------------------------------------------------------------------------
Phone: 20035
BISHOP’S HOUSE
Tuticorin - 628 001.
21.5.1976  

Rev. and dear Father,
with all my heart I bless your endeavors to spread the Message of Our Lady of Fatima.  The book “Fatima Apparitions” is sure to do immense good and bring the young to the bosom of our Heavenly Mother and Her Divine Son.

D. PAUL ARULSWAMY
Bishop of KUMBAKONAM.
--------------------------------------------------------------------------------------------------------------------------
Phone: 452
BISHOP’S HOUSE
P.B.No. 17,    
Nagercoil - 629001
Tamilnadu, India.

இயேசுவில் அன்புள்ள சுவாமி அவர்களுக்கு,

மரியன்னை பாத்திமா நகரிலே கொடுத்த காட்சிகளை ஒரு நூலாக வெளியிடப் போவதை அறிந்து மகிழ்கிறேன்.   தமிழ் மக்கள் இந்நூலை வாசித்துப் பயன் பெறுவார்களாக.  உங்கள் முயற்சிக்கு என் அன்பு ஆசீரும், வாழ்த்துக்களும்.

இயேசுவில் உங்கள் அன்புள்ள
மரியானுஸ் ஆரோக்கியசாமி,
கோட்டாறு ஆயர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
BISHOP’S HOUSE
34, Officer’s Line
Vellore - 632991, N.A. DT.
Date : 14-4-76.

“பாத்திமா காட்சிகள்” என்ற நூலை நீங்கள் வெளியிடுவது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  தேவ தாயின் திருக் காட்சிகளும்,  அன்னை வெளிப்படுத்திய மறை உண்மைகளும் இந்நூலில் முழுமையாக இடம் பெற்றிருப்பது போற்றுதற்குரிய தாகும்.

அன்னையிடம் நமது உள்ளங்களைத் தரும்போது, அவர்களது மேலான முன்மாதிரிகையும், தாய்க்குரிய பாசமும் நம்மை எளிதில் சேசுவிடம் இட்டுச் செல்லும் என்பது உறுதி.

பாத்திமா அன்னை பக்தி முயற்சிகளால் கிறீஸ்துவின் அரசு அகில உலகமெங்கும் பரவிட நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சி களையும் பாராட்டுகிறேன்.  உங்களது தன்னலமற்ற சேவைக்கு எனது ஒத்துழைப்பு என்றும் இருக்கும்.

அன்னையின் பக்தர்களுக்கு எனது அன்பு கலந்த ஆசீர்.
ANTONY MUTHU
வேலூர் ஆயர்.
-------------------------------------------------------------
Phone: 2 3 5 3 0
BISHOP’S HOUSE
Post Box No. 6,
Coimbatore - 641001
S.India.
Date : 10-5-1976

சமாதானத் திட்டம் என்ற அடிப்படையில் பாத்திமா அன்னையின் பக்தியைப் பரப்பச் செய்யவும், வளரச் செய்யவும், பெரிதும் முயற்சி எடுக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி யுறுகின்றேன்.  அதற்கு உறுதுணையாக, “பாத்திமா அன்னையின் காட்சிகள்” என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவருவதைப் பாராட்டுகிறேன்.  இதனால் முதல் சனிக்கிழமை பக்தியானது இறைமக்கள் மத்தியில் பரவி வளர்ச்சியடைந்து, அன்னையின் திட்டம் நிறைவேறும் என நம்புகிறேன்.

ஆசீர்!
C.M. VISUVASAM,
கோவை மேற்றிராணியார்.
------------------------------------------------------------
Tel: 2362 
PALAYAMKOTTAI-627002
South India.

கிறீஸ்துவின் சமாதானம்.

பாத்திமா காட்சிகள் பற்றிய புதிய தமிழ்ப் புத்தகம் ஒன்று வெளியிடுகிறீர்கள் என அறிந்து மகிழ்கின்றேன். பாத்திமாவிலே நம் அன்னை மாமரி உலகுக்கு வழங்கிய அருட் செய்திகளைத் தாங்கி வரும் இப்புதிய ஏடு, நம் தமிழக மக்களின் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு விழிப்புணர்வு வழங்கும் என நம்புகிறேன்.  அன்னையின் சமாதானத் திட்டத்தைத் தமிழகத்திலே விரிவு படுத்துவதில் நீங்கள் காட்டும் ஆர்வத்தை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.  வாசகப் பெருமக்கள் அவைரும் உண்மையான சமாதானத்திலே ஊன்றி நின்று அன்னையின் அன்பு மக்களாய் வாழ இந்நூல் துணைபுரிய வாழ்த்துகிறேன்.  “மரியாயின் வழி இயேசுவிடம்” என்ற முதுமொழிக்கிணங்க அன்னையின் பக்தர்கள் அனைவரும் அவர்களுடைய அன்பு மகன் இயேசுவை நிச்சயம் அடைவர் என்ற நம்பிக்கையுடன் ஆசீரளிக்கிறேன்.

கிறீஸ்துவில் அன்புள்ள,
ச. இருதயராஜ்,
பாளையங்கோட்டை ஆயர்.
--------------------------------------------------------------
BISHOP’S HOUSE
    Post Box No. 703,
Salem - 636007, Tamil Nadu,
India.
Date : April 2, 1976.

God bless your timely apostolate in spreading the devotion to and Message of Our Lady of Fatima.

Hindu brothers in Salem who are regular readers of “Fatima” have expressed their gratitude to Our Lady of Fatima for the spiritual and temporal guidance and favours received through Her. I am sure the forthcoming book “Fatima   Apparitions” will awaken the conscience of  humanity and hearken to the Message of Our Lady for the salvation of human race.

Yours devotedly in Our Lord,
MICHAEL B. DURAISAMY
Bishop of Salem.
--------------------------------------------------------------------------------------------------------------------------
BISHOP’S HOUSE
Post Box No. 5,
Ootacamund-643001, 
S.India.
Date : April 72, 1976.

ஆசி உரை

மாதாவின் பக்தர்களே!

தன் மகன் துன்பத்தால் வாடுகிறபோது, ஓடிவந்து கட்டி யணைத்து, கண்ணீர் சிந்தி, அருகிலேயே அமர்ந்திருந்து ஆறுதல் தருகிறவள் அன்னை. அன்னையின் அன்பிற்கு ஈடிணை இல்லை. தான் பெற்ற பிள்ளைக்கு ஒன்று என்றால் ஓடியோடி உதவி செய்பவள் அவள்.

மரியன்னை நம் அன்னை. சிலுவையின் அடியிலே நம்மைத் தன் மக்களாக ஏற்றுக்கொண்ட அன்பு அன்னை. அவள் காலமெல் லாம் நம் தேவைகளை உணர்ந்து ஓடி வந்து துணை நின்று கொண்டே இருக்கிறாள். உலகிலே தன் மக்கள் வழிதவறிப் போகும் போது--வழி தெரியாது வாடும்போது--வாட்டி வதைக்கப்படும் போது--அருள்தேடி அலையும்போது அருளை வாரி வந்து வழங்குபவள், வழிகாட்டுபவள்.

ஓ, நமக்காக, நமக்குத் துணை செய்வதற்காகத்தான் அவள் லூர்து கெபியிலே காட்சி தந்தாள்--லாசாலெத்திலே காட்சி கொடுத் தாள்--பாத்திமாவிலே காட்சி தந்தாள்.

பாத்திமாவிலே நம் அன்னை காட்சி தந்தபோது சொன்ன செய்தியை எல்லோரும் அறிய வேண்டும்; அன்னையின்பால் பக்தி கொள்ள வேண்டும்; கிறீஸ்துவின் வழியில் நடக்க வேண்டும். அதற் காக, பல்வேறு வகையில் பாத்திமா பக்தியை வளர்த்து வருகிற தந்தை, மறைத்திரு எஸ். பெர்னாண்டோ அவர்களைப் பாராட்டு கிறேன். அவரது முயற்சியால் வெளிவருகிற இந்நூலைப் படிக்கிற வாசகர்கள் மாதாவின் மேல் அதிகமதிகம் பக்தியில் வளர வாழ்த்துகிறேன்.

இறைவனில் அன்புடன்
ARUL DAS JAMES,
கோவை மேற்றிராணியார்.