இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு.

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."
- அருளப்பர் 6 :51

 யாருக்கும் கிடைக்காத பாக்கியம் கிடைக்க வரம் பெற்றவர்கள் நாம்..கடவுளையே வாங்கும் பேறு பெற்றவர்கள்  நாம்... உயிருள்ள கடவுளையே உணவாக உட்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் நாம்...

இந்த ஒப்புயர்வான உன்னத உணவான திவ்ய நற்கருனையை உண்ணும் முன் கொஞ்சமாவது “ இன்று நான் நற்கருணை  உண்ண முழு தகுதி பெற்றிருக்கிறேனா “ என்று யோசிக்கிறோமா? பெரும்பாலும் ஒரு சடங்காக ஒரு வழக்கமாக.. பூசைக்கு சென்றால் நன்மை வாங்க வேண்டும். ஒரு வேளை நான் இன்று நன்மை எடுக்கவில்லை என்றால் பக்கத்தில் இருப்பவன், இருப்பவன் நான் ஏதோ பாவம் செய்துவிட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துவிடுவானே...கூடாது..

அது தான் இப்போது ஃபாதர்ஸே சொல்லிட்டாங்க அதனால் கைகளில் வாங்குவதுதான் டீசண்ட் என்று நினைத்து கரங்களில் வாங்குவது...( திவ்ய நற்கருணை  நாதரை கரங்களில் வாங்குவோரே.. நாளை ஆண்டவர் உங்களிடம் கேட்க இருக்கும் கேள்விகளுக்கு இப்போதே தயாராகிக் கொள்ளுங்கள்)

எல்லாரும் முக்கியம் எல்லாமும் முக்கியம் இறைவனைத் தவிர..அவர்தான் பேசுவதே இல்லையே..(ஆனால் அவர் பேசும்போது அவர் மட்டும்தான் பேசுவார்.. அப்போது நம்மால் பேசமுடியாது) அதனால் பக்கத்தில் பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்...கரவொலி எழுப்புவோம்...வேடிக்கை பார்ப்போம்..

இவன் எப்போது பேசுவான் இவள் எப்போது பேசுவாள் என்று காத்திருந்து காத்திருந்து சலிப்படைந்து..மனம் உடைந்து அவர் உன்னைவிட்டு விலகும் போது “ ஐயையோ இயேசுவை மறந்தே விட்டேனே என்று நினைக்கும் போது அவர் உன்னை விட்டு வெகு தூரம் சென்றிருப்பார்.. அவரை நெருங்கும் முன் வாழ்க்கையே கூட முடிந்து விடும்... இது தேவையா ?

ஆண்டவர் இயேசு  நம் உள்ளத்தில் எழுந்தருளிய பின் திவ்ய மாதாவுக்கு கிடைத்த வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது என்பதை யாரும் மறக்க வேண்டாம்.. மாதாவுக்காவது ஒரு முறைதான் கிடைத்தது.. நமக்கு ஒவ்வொரு திருப்பலியிலும் கிடைக்கிறது.. ஆனால் இந்த வாய்ப்புகளை தவற விட்டு பராக்கு பார்த்தால்...நமக்கு எல்லாம் கிடைக்கும் நேரம் அது..நம்மவரை வாழ்த்திவிட்டு நமக்கு தேவையானவைகளையும் பெற்றுக்கொள்ளும் நேரம் இது... இந்த பரலோக நேரத்தை வீணடிக்கலாமா?..

எல்லாரையிம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு மனம் திரும்பி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை வாங்குவோம்.. தகுந்த தயாரிப்போடு  ஆண்டவரை வாங்குவோம்..நம் மனதுக்குள் வரும் இறைவன் அசிங்கப்படகூடாது..வேதனை படகூடாது..துயரப்படக்கூடாது..மாறாக சந்தோசப்படவேண்டும்....

“ அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே அன்புப் பாதையில் வழி  நடந்தே அடியோன் வாழ்ந்திட துணை செய்வீர் “