பயணம், வேலைக்குப் புறப்படுமுன் ஜெபம்

வீட்டிலிருந்து பயணம் அல்லது அலுவலுக்குப் புறப்படும்போது

ஆண்டவரே, அடியேன் வீட்டிலிருந்து புறப்படுகிற இந்தப் பயணத்தில் (அலுவலில்) சகல ஆபத்துக்களிலிருந்தும் என்னைத் தற்காத்து உமது அடைக்கலத்திற்குள் நான் இருக்கச் செய்து நான் செய்கிற நற்காரியத்தை சுலபமாக்கி மோட்ச வழிதவறாமல் நடக்கக் கிருபை செய்தருளும்.  ஆமென்.


அலுவல் தொடங்கும்போது

சர்வேசுரா சுவாமி, தேவரீருடைய திருநாமத்துக்குப் புகழ்ச்சி உண்டாகும்படிக்குத் துவக்கும் இந்த வேலையை முடிவுமட்டும் சேசு நாதருடைய புண்ணியங்களோடு உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.  ஆமென்.

(வேலை செய்யும்போது ஆண்டவரை இடைக்கிடையே நினைப்பாயாக.)


வேலை முடிந்தபின் ஜெபம்

சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சரணமாக ஓடி வந்தோம்.  எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவருமாய், மோட்சம் உடையவருமாயிருக்கிற நித்திய கன்னிகையே, சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்தருளும்.  

ஆமென்.