இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உணவுக்குப் பின் நன்றியறிந்த தோத்திரம்.

சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா! தேவரீர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரீர் எனக்குச் செய்து வருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு தோத்திரம் பண்ணுகிறேன்.

சுவாமி கிருபையாயிரும்.
கிறிஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி கிருபையாயிரும்.
பரலோக மந்திரம்.

இப்பொழுதும் எப்பொழுதும் ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி, எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய சீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி.

ஆமென்.