இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரிடம் உழைப்பாளியின் செபம்:

உழைப்பாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரே! உமது உழைப்பை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே; உமது வேலையை நீர் அன்பு செய்து உமது திருக்குடும்பத்தைக் காப்பாற்றியது போல நானும் என் பணியை பெரிதெனக் கருதி, நேரத்தோடு வேலைக்கு சென்று காலத்தையும், பொருளையும், பணத்தையும் வீணாக்காமல் அன்பு செய்து என் குடும்பத்தையும் காப்பாற்றுவேனாக. எப்பொழுதும் உழைப்பில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும் நிறுவனத்தாருக்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. இறைவனின் திருவுளத்தை உமது ஊழியத்தால் நிறைவு செய்ததுபோல என் ஊழியத்தால்  இறைவனின்  திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக ஆண்டவர் இயேசுவிடம் மன்றாடுவீராக.

ஆமென்