இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய நற்கருணைநாதரிடம் விசுவாச முயற்சி:


இறைவா! நீர் இந்தப் பீடத்தில் உண்மையாகவே வீற்றிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறோம். உம் திரு முன்னிலையில் எங்களைத் தரை மட்டும் தாழ்த்தி, மனம் மொழி மெய்யால் மரியாதை செலுத்துகிறோம். மனமே, இயேசுவின் அருகில் இருப்பதும், அவரோடு உள்ளம் திறந்து பேசுவதும், நமக்கு எத்துணை ஆறுதல்.

ஆண்டவரே! இம்மையில் உம்மை ஆராதிக்கும் நாங்கள், மறுமையிலும் இன்னும் சிறந்த முறையில் உம்மை ஆராதிக்க அருள் தாரும்.

ஆமென்.