✠ இலத்தீன் திருப்பலி

ஆயத்தப் பூசை: உபதேச பாகம்.

ஆயத்தம்: தீர்த்தம் தெளித்தலிருந்து சபை செபம் வரையில்: குரு பூசை உடுப்புகளை அணிந்து கொண்டு பாத்திரத்தை கையிலேந்தி பீடத்தின் முன் நடுவே தரையில் முழந்தாட்படியிட்டுப் பீடத்திலேறிப் பாத்திரத்தை மத்தியில் வைத்த பின், பூசைப்புத்தகத்தினிடம் போய், அன்றைய பாகத்தைத் திறந்த வைத்தபின், நடுவில் வந்து மேல ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாடுபட்ட சுரூபத்தை நோக்கி சிரம் பணிந்து கீழே வருகிறார். பீடத்தினடியில் - ஆரம்பச் செபங்கள் (முழந்தாட்படியிடவும்). (குரு சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு தெளிவான குரலோடு)

குரு: பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரித்து சாந்துவுடையவும் நாமத்தினாலே ஆமென்.
In nómine Patris, et Fílii, + et Spíritus Sancti. Amen.

சர்வேசுரனுடைய பீடத்தின் முன் பிரவேசிப்பேன்.
IIntroíbo ad altáre Dei.

சங்கீதம் 42

மக்: எனது வாலிபத்தை மகிழ்விக்கும் தேவனிடத்தில் பிரவேசிப்பேன்.
Ad Deum qui lætíficat juventútem meam.

குரு: சர்வேசுரா, பக்தியற்ற ஐனத்திற்கு விரோதமாய் என் நியாயத்தை விசாரித்தருள்வீராக: கெட்டவனும் கபடு உள்ளவனுமாகிய மனிதனிடத்தின்றும் என்னை விடுதலையாக்கும்.
Júdica me, Deus, et discérne causam meam de gente non sancta: ab hómine iníquo, et dolóso érue me.

மக்: ஏனெனில் சர்வேசுரா நீரே எனக்கு பலமாயிருக்கிறீர்.  என் என்னை தள்ளிவிட்டீர்?  என் சத்துரு என்னைத் துன்பப்படுத்தும் போது நான் துக்கங்கொண்டு திரிவானேன்.
Quia tu es, Deus, fortitúdo mea: quare me repulísti, et quare tristis incédo, dum afflígit me inimícus?

குரு: உமது பிரகாசத்தையும் உமது சத்தியத்தையம் அனுப்பியருளும்.  அவைகளே உமது பரிசுத்த மலைக்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னை நடத்திப் கொண்டு போயின.
.Emítte lucem tuam, et veritátem tuam: ipsa me deduxérunt, et aduxérunt in montem sanctum tuum, et in tabernácula tua.

மக்: சர்வேசுரனுடைய பீடத்தின் முன் பிரவேசிப்பேன். எனது வாலிபத்தை மகிழ்விக்கும் தேவனிடத்தில் பிரவேசிப்பேன
.Et introíbo ad altáre Dei: ad Deum qui lætíficat juventútem meam.

குரு: சர்வேசுரா என் சர்வேசுரா நான் வீணையை கொண்டு துதிப்பேன்.  என் ஆத்துமமே ஏன் வருத்தமாயிருக்கிறாய்? ஏன் எனக்கு கலக்கம் வருவிக்கிறாய்?
Confitébor tibi in cíthara, Deus, Deus meus: quare tristis es, ánima mea, et quare contúrbas me?

மக்: சர்வேசுரன் பேரில் நம்பிக்கையாயிரு: ஏனெனில் அவரை இன்னுந் துதிப்பேன்.  என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனும் அவரே
Spera in Deo, quóniam adhuc confitébor illi: salutáre vultus mei, et Deus meus.

குரு: பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரித்து சாந்துவுக்கும் மகிமை உண்டாவதாக
Glória Patri, et Fílio, et Spirítui Sancto.

மக்: ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
Sicut erat in princípio et nunc, et semper, et in sæcula sæculórum. Amen.

(திரும்பவும் ஆரம்ப வாக்கியம்)

குரு: சர்வேசுரனுடைய பீடத்தின் முன் பிரவேசிப்பேன்.
.Introíbo ad altáre Dei.

மக்: எனது வாலிபத்தை மகிழ்விக்கும் தேவனிடத்தில் பிரவேசிப்பேன்.
Ad Deum qui lætíficat juventútem meam.

The priest, signing himself with the Sign of the Cross, says:

குரு: ஆண்டவருடைய நாமத்தினால் தான் நமக்கு உதவி இருக்கிறது.
Adjutórium nostrum + in nómine Dómini.

மக்: அவரே பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தவர்
.Qui fecit cælum et terram.

குரு: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனுடேயும்…
Confíteor Deo omnipoténti,

மக்: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரன் உம்மீது இரக்கம் கொண்டு உம்முடைய பாவங்களை மன்னித்து உம்மை நித்திய சீவியத்திற்கு அழைத்து செல்வாராக.
Misereátur tui omnípotens Deus, et dimíssis peccátis tuis, perdúcat te ad vitam ætérnam.

குரு: ஆமென்
Amen.

மக்கள்: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனுடேயும் எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற முத்திப்பேறு பெற்ற மரியாயுடனேயும் பிரதான சம்மனசாயிருக்கிற முத்தான மிக்கேலுடனேயும் ஸ்நாபகனாயிருக்கிற முத்தான அருளப்பனுடேயும், அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பருடேயும் சின்னப்பருடனேயும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடனேயும் எனக்கு குருவாயிருக்கிற உம்முடனேயும் பாவசங்கீர்த்தனம் செய்கிறேன். ஏனென்றால் என் சிந்தனையினாலேயும் மகாபாவங்களைச் செய்தேனே, என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே, எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற முத்திப்பேறு பெற்ற மரியாளையும் பிரதான சம்மனசாயிருக்கிற முத்தான மிக்கேலையும் ஸ்நாபகனாயிருக்கிற முத்தான அருளப்பரையும், அப்போஸ்தலராயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பரையும் சின்னப்பரையும் சகல அர்ச்சியசிஷ்டவர்களையும் எனக்கு குருவாயிருக்கிற உம்மையும் நம்முடைய ஆண்டவரிடராயிருக்கிற சர்வேசுரனிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறேன்.

Confíteor Deo omnipoténti, beátæ Maríæ semper Vírgini, beáto Michaéli Archángelo, beáto Joanni Baptístæ, sanctis Apóstolis Petro et Paulo, ómnibus Sanctis, et tibi, Pater: quia peccávi nimis cogitatióne, verbo et ópere: mea culpa, mea culpa, mea máxima culpa. Ideo precor beátam Maríam semper Vírginem, beátum Joánnem Baptístam, sanctos Apóstolos Petrum et Paulum, omnes Sanctos, et te, Pater, oráre pro me ad Dóminum Deum nostrum.

குரு: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரன் உங்கள் மீது இரக்கம் கொண்டு உங்களுடைய பாவங்களை மன்னித்து உங்களை நித்திய சீவியத்திற்கு அழைத்து செல்வாராக.
Misereátur vestri omnípotens Deus, et dimíssis peccátis vestris, perdúcat vos ad vitam ætérnam

மக்: ஆமென்

நம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்வோம்.

குரு: சர்வ வல்லபரும் தயாபரருமான சர்வேசுரன் நமது பாவங்களுக்கு மன்னிப்பையும் பொறுத்தலையும், விமோசனத்தையும் நமக்கு அளிப்பாராக.
Indulgéntiam,+absolutiónem, et remissiónem peccatórum nostrórum tríbuat nobis omnípotens et miséricors Dóminus.
மக்: ஆமென்.

(எல்லோரும் சிரம் வணங்கி)

(சங். 84: 7-8)

குரு: சர்வேசுராஈ தேவரீர் எங்கள் பாரிசமாய்த் திரும்பி எங்களை உயிர்பித்தருளும்.
Deus, tu convérsus vivificábis nos.

மக்: உமது ஐனமும் உம்மிடம் மகிழ்ச்சி கொள்ளும்.
Et plebs tua lætábitur in te.

குரு: ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்கு காண்பித்தருளும்.
Osténde nobis, Dómine, misericórdiam tuam.

மக்: உமது இரட்சண்யத்தையும் எங்களுக்கு தந்தருளும்.
Et salutáre tuum da nobis.

குரு: ஆண்டவரே என் மன்றான்டை கேட்டருளும்
Dómine, exáudi oratiónem meam.

மக்: என் கூக்குரல் உம்முடைய சன்னதி மட்டும் வரக்கடவது.
Et clamor meus ad te véniat.

குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக
Dóminus vobíscum.

மக்: உமது ஆவியோடும் இருப்பாராக.
Et cum spíritu tuo.

குரு: செபிப்போமாக (என்று சொல்லிக் கரங்களை விரித்துப் பின் சேர்த்து கொண்டு பீடத்தை நோக்கி ஏறுகிறார்)
Orémus.

5. குரு பீடத்தை நோக்கி ஏறுதல் - The priest ascends the altar and says silently: (பீடத்தை முத்தி செய்தல்)

குரு: ஆண்டவரே, தேவரீருடைய மகா பரிசுத்த சன்னிதானத்தில் நாங்கள் சுத்தமனதுடன் பிரவேசிக்க அருகாருகும்படி, எங்கள் அக்கிரமங்களை எங்களிடமிருந்து அகற்றியருளத் தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் பேரால் - ஆமென்.
Aufer a nobis, quæsumus, Dómine, iniquitátes nostras: ut ad Sancta sanctórum puris mereámur méntibus introíre. Per Christum Dóminum nostrum. Amen.

குரு பீடத்தின் மேல் கரங்களைக் குவித்து வைத்து

ஆண்டவரே, இங்கு எந்தெந்த அர்ச்சியசிஷ்டவர்களுடைய பரிசுத்த பண்டங்கள் இருக்கின்றனவோ (பீடத்தை முத்தி செய்து) அவர்களுடையவும், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் பேறுபலன்களைக் குறித்து என் பாவங்களையெல்லாம் மன்னிக்கத் தயை செய்தருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம் - ஆமென்
Orámus te, Dómine, per mérita Sanctórum tuórum, quorum relíquiæ hic sunt, et ómnium Sanctórum: ut indulgére dignéris ómnia peccáta mea. Amen.

6. பாடற்பூசையில் பீடத்திற்கு தூபமிடல்

(இப்போது MC "சங்கைக்குரிய தந்தையே, ஆசீர்வதித்தருளும்" என்று சொல்லிக் கொண்டு சாம்பிராணியைக் கொடுக்கிறார்.  குரு, தூபத்தில் சாம்பிராணியைப் போட்டு, "யாருடைய மகிமைக்காக எரிக்கப்படுவாயோ அவராலேயே ஆசீர்வதிக்கப்படுவாயாக" என்று சொல்லிக்கொண்டு சிலுவை அடையாளத்தால் ஆசீர்வதித்து, பாடுபட்ட சுருபத்திற்கும், பீடத்திற்கும் தூபங்காட்டுகிறார்.  அதன்பின் MC குருவுக்கு தூபமிடுவார்.  இந்த சடங்கு, மரித்தோர் பூசையில் நடப்பதில்லை)

At a high Mass the priest will incense the altar. While blessing the incense the priest says: Ab ilio + benedicáris, in cujus honóre cremáberis. Amen.

7. பிரவேச வாக்கியம் - Introitus

குரு பூசைப் புத்தகத்தண்டை சென்று பிரவேச வாக்கியத்தின் முதல் நான்கு வார்த்தைகளை சொல்லிக்கொண்டே, தம்மீது சிலுவை அடையாளத்தை வரைந்து திவ்விய பூசையை ஆரம்பிக்கிறார்.  இவ்வாக்கியம் ஒவ்வொருநாளும் செய்யப்படும் பூசையின் கருத்துக்கு ஏற்றவாறும் திருநாளுக்குத் தக்க வாறும் வேறுபடும்.
Moving to the right side of the altar the priest makes the sign of the cross and reads the Introit.

8. கிருபை மன்றாட்டு –  Kyrie

குரு பீடத்தின் நடுவே சென்று இக்கிருபை மன்றாட்டை பிதா (Kyrie), சுதன் (Christe), இஸ்பிரித்து சாந்து (Kyrie) ஒவ்வொரு ஆளுக்கும் மும்முறையாக வேண்டுகிறார்.  பாடற்பூசையில் இதைப் பாடுவார்கள்.

குரு: சுவாமி கிருபையாயிரும்
மக்: சுவாமி கிருபையாயிரும்.
குரு: சுவாமி கிருபையாயிரும்.
மக்: கிறிஸ்துவே கிருபையாயிரும்
குரு: கிறிஸ்துவே கிருபையாயிரும்
மக்: கிறிஸ்துவே கிருபையாயிரும்
குரு: சுவாமி கிருபையாயிரும்
மக்: சுவாமி கிருபையாயிரும்.
குரு: சுவாமி கிருபையாயிரும்.

The priest returns to the middle of the altar and joins his hands.

P.Kýrie, eléison.
S.Kýrie, eléison.
P.Kýrie, eléison.
S.Christe, eléison.
P.Christe, eléison.
S.Christe, eléison.
P.Kýrie, eléison.
S.Kýrie, eléison.
P.Kýrie, eléison

9. சம்மனசுகளின் கீதம்- Gloria

குரு கரங்களை உயர்த்தி, சிரம் சிறிது குனிந்து சொல்லுகிறார்.  பாடற் பூசையில் இது பாடப்படும். ஆகமண காலத்திலும் தபசு காலத்திலும் மரித்தோர் பூசையிலும் இது சொல்லப்படுவதில்லை.

1.உன்னதங்களிலே (சிரம் வணங்கி) சர்வேசுரனுக்கு மகிமையும், பூலோகத்தில் நல்ல மனதுள்ள மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாவதாக.
2. நாங்கள் உம்மைப் புகழ்கிறோம்.
3. உம்மை வாழ்த்துகிறோம்
4. (சிரம் வணங்கி) உம்மை ஆராதிக்கிறோம்
5. உம்மை மகிமைப்படுத்துகிறோம்.
6. உமது மேலான மகிமையினிமித்தம் (சிரம் வணங்கி) உமக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்துகிறோம்)
7. தேவனாகிய ஆண்டவரே, பரலோக இராசாவே, சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரா,
8. ஏக குமரானாய் பிறந்து சுதானாகிய ஆண்டவரே, (சிரம் வணங்கி) சேசு கிறிஸ்துவே
9. தேவனாகிய ஆண்டவரே, சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையே, பிதாவின் குமாரனே.
10. உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
11. உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, (சிரம் வணங்கி) எங்கள் மன்றாட்டை ஏற்றுக் கொள்ளும்.
12. பிதாவின் வலப்பாரிசத்தில் வீற்றிருக்கிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
13. ஏனெனில் நீர் ஒருவர் மாத்திரமே பரிசுத்தர்.
14. நீர் ஒருவர் மாத்திரமே ஆண்டவர்.
15. நீர் ஒருவர் மாத்திரமே மகா உன்னதமானவர்.  (சிரம் வணங்கி) சேசுக் கிறீஸ்துவே
16. (சிலுவை அடையாளம் வரைந்து) இஸ்பிரீத்துசாந்துவோடு பிதாவாகிய சர்வேசுரனின் மகிமையில் வீற்றிருக்கிறீர்.
17. ஆமென்.

The Glória is not said during Lent, Advent, Septuagesima and Masses for the Dead. Stand at a high Mass. The priest extends his hands and then rejoining them begins the Gloria. The people may join after the first phrase.

1. Glória in excélsis Deo, et in terra pax homínibus bonæ voluntátis.
2. Laudámus te.
3. Benedícimus te.
4. Adorámus te.
5. Glorificámus te.
6. Grátias ágimus tibi propter magnam glóriam tuam.
7. Dómine Deus, Rex cæléstis, Deus Pater omnípotens.
8. Dómine Fili unigénite, Jesu Christe.
9. Dómine Deus, Agnus Dei, Fílius Patris.
10. Qui tollis peccáta mundi, miserére nobis.
11. Qui tollis peccáta mundi, súscipe deprecatiónem nostram.
12. Qui sedes ad déxteram Patris, miserére nobis.
13. Quóniam tu solus Sanctus.
14. Tu solus Dóminus.
15. Tu solus Altíssimus, Jesu Christe.
16. Cum Sancto Spíritu, + in glória Dei Patris.
17. Amen.

இரண்டாம் பிரிவு - உபதேசபாகம்.

சபைசெபம் முதல் விசுவாசப் பிரமாணம் வரையில். குரு பீடத்தை முத்திசெய்து, விசுவாசிகளை மினவி அவர்களைத் தம்முடைய ஐக்கியத்திலிருக்கும்படிஅழைத்தபின் இப்பாகத்தை துவக்குகிறார்.

குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக!
மக்: உமது ஆவியோடும் இருப்பாராக.
குரு: செபிப்போமாக

He kisses the Altar and turning to the people says:

P. Dóminus vobíscum.
S.Et cum spíritu tuo.

1.   சபைசெபம் Collecta. குரு பூசைப் புத்தகத்தண்டைபோய்,கரங்களைவிரித்துக் கொண்டு,குறிக்கப்பட்ட“சபை செபத்தை”செபிக்கிறார்.  இதுநாளுக்குநாள் வேறுபடும்.  இதோடு2, 3 “ஞாபகச் செபங்கள்”அல்லதுவேண்டுதல் செபங்களையும் சேர்த்துசொல்லுவார்;.  பாடற் பூசையில் இதைப் பாடுவார். The priest turns back to the altar and says: Orémus. செபத்தின் முடிவில் கரங்களைக் குவித்துக்கொண்டு

குரு: என்றென்றைக்கும் சதாகாலமும்
மக்: ஆமென்

2. நிருபவாக்கியம் - அப்போஸ்தலர்களின் போதனை. குரு சற்று உயர்த்திய குரலில் நிருபத்தைஅல்லதுவாசகத்தைவாசிக்கிறார். முடிவில்

மக்: சர்வேசுரனுக்குதோத்திரம்.
S. Deo grátias.

3. படிக்கீதம் - சங்கீதப் பாட்டுகள் (Graduale, Alleluja, Tractus, Sequentia)

நிருப வாக்கியத்திற்கு பின் குரு படிகீதத்தையும், (Graduale) அல்லேலுயா கீதத்தோடு(Alleluja) சேர்ந்த வசனங்களையும் வாசிக்கிறார். பாஸ்கு காலத்தில் அல்லேலுய்யா கீதமட்டும்; தபசு காலத்தில் படிகீதமும், நெடுங்கீதமும்: (Tractus) விசேஷ நாட்களில் தொடர்கீதமும் (Sequentia) வாசிக்கப்படும். பாடற் பூசையில் இதைப் பாடுவார்கள்.

4. ஆசீர் கேட்டல் Muda Cor meum

சங்கீதப் பாடல்களுக்குப் பின் குரு பீடத்தின் நடுவிற் சென்று தாழத் தலைவணங்கி இரண்டு செபங்களை சொல்லுகிறார்.  பரிசாரகன் பூசை புத்தகத்தை பீடத்தின் வலப் புறத்திற்கு மாற்றுகிறார். 



After the gradual the missal is moved to the left side of the altar while the priest, bowing at the middle of the altar, says:


1. இசையாஸ் தீர்க்கதரிசியின் உதடுகளை அக்கினித் தழலைக் கொண்டு தூய்மைப்படுத்திய சர்வ வல்லபரான சர்வேசுரா, தேவரீர் என்னுடைய இருதயத்தையும் உதடுகளையும் சுத்திகரித்து உமது பரிசுத்த சுவிசேஷத்தை தகுந்த வண்ணம் போதிக்க நான் அருகணாகும்பழ என்னை உமது தயையுள்ள இரக்கத்தினால் பரிசுத்தப்படுத்தக் கிருபை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்வின் பேரால் ஆமென்.

2. ஆண்டவரே என்னை ஆசீர் வதித்தருள்வீராக.  ஆண்டவருடைய சுவிசேஷத்தை நான் தக்க விதமாயும் தகுந்த மேரையோடும் வெளிப்படுத்த அவர் என் இருதயத்திலும் உதடுகளிலும் இருந்தருள்வாராக. ஆமென்.

(மரித்தோர் பூசையில் இந்த இரண்டாவது செபம் சொல்லுவதில்லை.)

எழுந்து நிற்கவும்

1. Munda cor meum ac lábia mea, omnípotens Deus, qui lábia Isaíæ Prophétæ cálculo mundásti igníto: ita me tua grata miseratióne dignáre mundáre, ut sanctum Evangélium tuum digne váleam nuntiáre. Per Christum Dóminum nostrum. Amen.

2. Jube, Dómine, benedícere. Dóminus sit in corde meo, et in lábiis meis: ut digne et competénter annúntiem Evangélium suum. Amen.

The second prayer is omitted in Requiem Masses

5. சுவிசேஷ வாக்கியம். குரு விசுவாசிகளின் கவனத்தை கவர்வதற்கு சொல்லுவதாவது

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
மக்: உமது ஆவியோடும் இருப்பாராக

குரு புத்தகத்தின் மேலும், தமது நெற்றியிலும், வாயிலும், நெஞ்சிலும் சிலுவை அடையாளத்தை வரையும்பொழுது

குரு: அர்ச். மத்தேயு (மாற்கு, லூக்கா, அருளப்பர்) எழுதின பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி (அல்லது ஆரம்பம்)
மக்: ஆண்டவரே உமக்கு மகிமையுண்டாவதாக.

சுவிசேஷம் இன்றைய பூசையிலிருந்து

சுவிசேஷ வாசகத்தின் முடிவில்

மக்: கிறீஸ்துவே உமக்குப் புகழ் உண்டாவதாக


P. Dóminus vobíscum.
S.Et cum spíritu tuo.

Sequéntia sancti Evangélii secúndum N.+,

Glória tibi, Dómine
        .
The Gospel is read. At the end of the Gospel the server says:
Laus tibi, Christe.

குரு சுவிசேஷ வாக்கியத்தின் ஆரம்ப வார்த்தையை முத்தி செய்து

குரு: இப்போது வாசித்த சுவிசேஷ மொழிகளால் நம்முடைய பாவங்கள் ஒழியக்கடவன.

The priest kisses the book and says:
Per evangélica dicta, deleántur nostra delícta.

6. விசுவாச பிரமாணம்

குரு பீடத்தின் நடுவே சென்று கரங்களை மேலே உயர்த்தி மீளவும் குவித்து விசுவாசப் பிரமாணத்தை சொல்லுகிறார். இது வருடத்தில் வரும் எல்லா ஞாயிறுகளிலும், பெரிய திருநாட்களிலும், அப்போஸ்தலர்கள், வேதபாரகருடைய திருநாட்களிலும் சொல்லப்படும். பாடற் பூசையில் இதைப் பாடுவார்கள்.

1. பரலோகத்தையும் பூலோகத்தையும் காணப்படுபவை, காணப்படாதவை ஆகிய எல்லாவற்றையும் படைத்த, சர்வ வல்லபரான (சிரங்குணிந்து) பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். சுதனாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
2. சர்வேசுரனுடைய ஏக பேறான சுதனும் (சிரங் குணிந்து) ஆண்டவருமான சேசு கிறீஸ்துவை விசுவசிக்கிறேன்.
3. இவர் சகல யுகங்களுக்கு முன் பிதாவினிடமிருந்து பிறந்தார்.
4. இவர் சர்வேசுரனிடமிருந்து பிறந்த சர்வேசுரன்.  வெளிச்சத்தினின்றும் வந்த வெளிச்சம்: மெய்யான சர்வேசுரனிடமிருந்து வந்த மெய்யான சர்வேசுரன்.
5. இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவரல்லர். பிதாவோடு ஒரே வஸ்துவானவர்.  இவர் வழியாகத்தான் யாவும் உண்டாக்கப்பட்டன.
6. இவர் மனிதராகிய நமக்காகவும், நம்முடைய இரட்சணியத்திற்காகவும் பரலோகத்திலிருந்து இறங்கினார்.
7. (முழந்தாட்படியிட்டு) இஸ்பிரித்து சாந்துவினாலே கன்னி மரியம்மாளிடத்தில் மாமிசமாகி மனிதன் ஆனார்.
8. (எழுந்து நின்று) இவர் இன்னும் நமக்காகப் போஞ்சியுஸ் பிலாத்தின் கீழ் சிலுவையிலே அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
9. வேதாகமங்களின் படியே, மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தருளினார்.
10. பரலோகத்திற்கு எழுந்தருளிப் பிதாவின் வலப்பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.
11. சீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்க மகிமையோடே மீண்டும் வரவிருக்கிறார். அவருடைய இராச்சியத்துக்கு முடிவு இராது. இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்
12. பிதாவிடத்திலும் சுதனிடத்திலும் நின்று புறப்படுகிற ஆண்டவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிற இஸ்பிரித்து சாந்துவையும் விசுவசிக்கிறேன்.
13. இவர் பிதாவோடும், சுதனோடும் ஒன்றாக (சிரங் குனிந்து) ஆராதிக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுகிறவரும், தீர்க்கதரிசிகள் வழியாய் பேசியுள்ளவருமாமே. பரிசுத்த திருச்சபையை விசுவசிக்கிறேன்
14. மேலும் ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
15. பாவமன்னிப்புக்காகவுள்ள ஒரே ஞானஸ்தானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்
16. மரித்தோர் உத்தானத்தையும் எதிர்பார்க்கிறேன். (சிலுவை அடையாளம் வரைந்துகொண்டு)
17. வரப்போகிற மறு உலகத்தின் சீவியத்தையும் எதிர்பார்க்கிறேன்.
18. ஆமென்.

The Creed

1. Credo in unum Deum, Patrem omnipoténtem, factórem cæli et terræ, visibílium ómnium et invisibílium.
2. Et in unum Dóminum Jesum Christum, Fílium Dei unigénitum.
3. Et ex Patre natum ante ómnia sæcula.
4. Deum de Deo, lumen de lúmine, Deum verum de Deo vero.
5. Génitum, non factum, consubstantiálem Patri: per quem ómnia facta sunt.
6. Qui propter nos hómines et propter nostram salútem descéndit de cælis. (Kneel)
7. Et incarnátus est de Spíritu Sancto ex María Vírgine: Et homo factus est. (Stand)
8. Crucifíxus étiam pro nobis: sub Póntio Piláto passus, et sepúltus est.
9. Et resurréxit tértia die, secúndum Scriptúras.
10. Et ascéndit in cælum: sedet ad déxteram Patris.
11. Et íterum ventúrus est cum glória judicáre vivos et mórtuos: cujus regni non erit finis.
12.  Et in Spíritum Sanctum, Dóminum et vivificántem: qui ex Patre, Filióque procédit.
13. Qui cum Patre, et Fílio simul adorátur, et conglorifícatur: qui locútus est per Prophétas.
14. Et unam, sanctam, cathólicam et apostólicam Ecclésiam.
15. Confíteor unum baptísma in remissiónem peccatorum.
16. Et expecto resurrectionem mortuorum,
17. et vitam + ventúri sæculi.
18. Amen.

இலத்தீன் பாடற்பூசை 

கீரியே எலேயிசோன் (சுவாமி கிருபையாயிரும்) 

கீரியே எலேயிசோன் - மூன்று தடவை.
க்றீஸ்தே எலேயிசோன் - மூன்று தடவை.
கீரியே எலேயிசோன் - மூன்று தடவை.

க்ளோரியா (சம்மனசுக்களின் கீதம்) 

க்ளோரியா இன் எக்ஸ்செல்ஸிஸ் தேயோ/ எத் இன் தெர்ரா பாக்ஸ் ஹோமினிபுஸ் / போனே வோலுந்தாத்திஸ் / லெளதாமுஸ் தே / பெனதீச்சி முஸ் தே | ஆதோராமுஸ் தே/க்ளோரிஃபிக்காமுஸ் தே |
ஆக்ராத்சியாஸ் ஆஜமுஸ் தீபி, ப்ரோப்தேர் மாஞ் ஞாம் பூக்ளோரியாம் தூவாம். / தோமினே தேயுஸ், ரெக்ஸ் செலஸ்திஸ், தேயுஸ் பாத்தெர் ஓம்னிப் பொத்தென்ஸ் / தோமினே fபீலி ஊனிஜெனித்தே / யேசுக்றீஸ்தே. /தோமினே தேயுஸ் ஆக்னுஸ் தேயி / fபீலியுஸ் பாரிஸ் /குயி தோல்லிஸ் பெக்காத்தா முந்தி மிசரேரே நோபிஸ். குயி தோல்லிஸ் பெக்காத்தா முந்தி /
சுஷிப்பே தெப்ரெக்காத்ஸியோனெம் நோஸ்த்ராம் /குயி சேதேஸ் ஆத் தெக்ஸ்தெராம் பாத்ரிஸ் / மிசரேரே நோபிஸ். கோனியாம் தூ சோலுஸ் சாங்த்துஸ் / தூ சோலுஸ் தோமினுஸ் / தூ சோலுஸ் ஆல்த்திஸிஸ் / யேசு க்றீஸ்தே / கும் சாங்த்தோ ஸ்பீரித்து இன் பூக்ளோரியா தேயி பாத்ரிஸ்.
ஆமென்.

க்ரேதோ (விசுவாசப் பிரமாணம்)

க்ரேதோ இன் ஊனும் தேயும் பாத்திரம் ஓம்னி பொத்தெந்தெம் fபாக்தோரெம் சேலி எத் தெர்ரே. விசிபீலியும் ஓம்னியும் எத் இன்விசிபீலியும். எத் இன் ஊனும் தோமினும் (சிரங் குனிந்து) யேசும் க்றீஸ்தும், Fபீலியும் தேயி ஊனி ஜெனித்தும்; எத் எக்ஸ் பாத்ரே நாத்தும் ஆந்த்தே ஓம்னியா சேக் குலா; தேயும் தே தேயோ, லூமென் தேலூமினே, தேயும் வேரும் தே தேயோ வேரோ; ஜெனித்தும் நோன்ஃபாக்தும், கொன்சுப்ஸ்தாந் ஸியாலெம் பாத்ரி பெர்க்வெம் ஓம்னியா பாக்தா சுந்த். குயி ப்ரோப்தெர் நோஸ் ஓமினெஸ் எத் ப்ரோப் தெர் நோஸ்த்ராம் சாலுத்தெம் தெஷெந்தித் தே சேலிஸ்.

(முழந்தாளிட்டு) எத் இன்கார்னாத்துஸ் எஸ் தே ஸ்பிரீத்து சாங்க்தோ எக்ஸ் மரியா வீர்ஜினே, எத் ஹோமோஃபாக்த்துஸ் எஸ். க்ரூச்சிfபிக்சஸ் எத்ஸியாம் ப்ரோ நோபிஸ், சுப் போன்ஷியோ பிலாத்தோ பாசுஸ் எத் செப்புத்துஸ் எஸ்த். எத் ரெசுரெக்ஷித் தெர்ஷியாதியே செக்குந்தும் ஸ்க்ரிப் துராஸ். எத் அஷெந்தித் இன் சேலும் செதேத் அத் தெக்ஸ்தெராம் பாத்ரிஸ். எத் ஈத்தேரும் வெந்துருஸ் எஸ்த் கும் க்ளோரியா, யூதிக்காரே வீவோஸ் எத் மோர்த்து வோஸ் குயுஸ் ரெக்னி நோன் எரித் fபீனிஸ்.

எத் இன் ஸ்பிரீத்தும் சாத்தும் தோமினும் எத்வீபிகாந்தேம்; குயி எக்ஸ் பாத்ரே, Fபீலியோக்வே ப்ரோச்சேதித். குயிகும் பாத்ரே எத் Fபீலியோ (சிரங் குனிந்து) சிமுல் ஆதோராத்துர், எத் கொங்க்ளோரி fபிக்காத்துர், குயி லோக்குத் துஸ் எஸ் பெர் ப்ரோ fபேத்தாஸ். எத் ஊனாம் சாத்தாம் கத்தோலிக்காம் எத் அப்போஸ்தோலிக்கரம் எக்ளேசியாம், கொணீபீத் தேயோர் ஊனும் பாப்திஸ்மா இன் ரெமிஸியோ னெம் பெக்காத்தோரும். எத் எக்ஸ்பெக்தோ ரெசு ரெக்ஸியோனெம் மோர்த்துவோரும். என் வீத்தாம் வெந்த்துரி சேக்குலி.
ஆமென்.

சாங்க்துஸ் (பரிசுத்தர், பரிசுத்தர்)

சாங்க்ஸ் சாங்க்ஸ் சாங்க்ஸ்,
தோமினுஸ் தேயுஸ் சாபாவோத்.
ப்ளேனி சுந்த் சேலி, எத் தெர்ராஜக்ளோரியா தூவா.
ஓசான்னா இன் எக்ஸ்செல்ஸிஸ்.
பெனதிக்துஸ் குயி வெனித் இன் நோமினே தோமினி,
ஓசான்னா இன் எக்ஸ்செல்ஸிஸ்.

ஆக்னுஸ் தேயி (உலகத்தின் பாவங்களைப் போக்குகிற) 

ஆக்னுஸ் தேயி, குயி தொல்லிஸ் பெக்காத்தா முந்தி, மிசரேரே நோபிஸ். (2)
ஆக்னுஸ் தேயி, குயி தொல்லிஸ் பெக்காத்தா முந்தி, தோனா நோபிஸ் பாச்செம்.

ஆவே மாரிஸ் ஸ்தெல்லா 

1. ஆவே மாரிஸ் ஸ்தெல்லா
தேயி மாத்தெர் ஆல்மா
ஆத்க்வே செம்ப்பெர் வீர்கோ
fபெலிக்ஸ் சேலி போர்த்தா ஆவே, ஆவே, ஆவே மரியா (2)

2. சூமென்ஸ் இல்லுத் ஆவே
Gகாப்ரியேலீஸ் ஓரே
fபுந்தா நோஸ் இன் பாச்சே
மூத்தான்ஸ் ஏவே நோமென்.

3. ஸித் லெளஸ் தேயோ பாத்ரி
சும் மோக்றீஸ்தோ தேக்குஸ்
ஸ்பீரித்தூயி சாங்க்தோ
த்ரிபூஸ் ஓனோர் ஊனுஸ்.
ஆமென்.

மாக்னிபிக்காத் (மரியாயின் கீதம்) 

1. மாக்னிபிக்காத் ஆனிமா மேயா தோமினும்

2. எத் எக்சுல்த்தாவித் ஸ்பீரித்துஸ் மேயுஸ்
இன் தேயோ சாலுத்தாரி மேயோ

3. குய்யா ரெஸ்பெக்சித் ஊமிலித்தாத்தெம்
ஆன்சில்லே சூவே : எக்சே எனிம்
எக்ஸ் ஓக் பேயாத்தாம் மே தீச்செந்த்,
ஓம்னெஸ் ஜெனெராத்ஸியோனெஸ்.

4. குய்யா fபேச்சித் மீகி மாஞ்ஞா
குயி போத்தென்ஸ் எஸ்த்:
எத் சாங்த்தும் நோமென் ஏயுஸ்

5. எத் மிசெரிக்கோர்தியா ஏயுஸ்
ஆப்ரோ ஜேனியே இன்ப்ரோ
ஜேனியெஸ் தீமெந்த்திபுஸ் ஏயும்.

6. Fபேச்சித் பொத்தென்சியாம் இன்ப்ராக்கியோ
சூவோ: திஸ் பெர்சித் சூப்பர் போஸ்,
மெந்த்தே கோர்திஸ் சூயி

7. தேப்போ சுமித் பொத்தெந்த்தெஸ்தே சேதே :
எத் எக்சால்த்தாவித் ஊமிலெஸ்

8. ஏசூரியெந்தெஸ் இம்ப்லேவித் போனிஸ் எத்
திவித்தெஸ் திமிச்சித் இனானெஸ்

9. சுஸ்சேப்பித் இஸ்ராயேல் பூவெரும் சூவும்
ரேக் கோர்தாத்துஸ் மிசெரிக்கோர்தியே சூவே.

10. சீக்குத் லோக்குத்துஸ் எஸ்த் ஆத் பாத்ரெஸ்
நோஸ்த்ரேரெஸ்: ஆப்ரஹாம் எத் செமினி
ஏயுஸ் இன் சேக்குலா

11. க்ளோரியா பாத்ரி, எத் பீலியோ, எத்
ஸ்பிரீத்துயி சாங்க்தோ

12. சீக்குத் எராத் இன்ப்ரின்சீப்பியோ எத் நுங்க்
எத் செம்ப்பர், எத் இன் சேக்குலா சேக்குலோரும்.
ஆமென். 

லீபெரா (அடக்கத்தின் போது பாடக்கூடியது) 

லீபெரா மே தோமினே தேமோர்த்தே
ஏத்தெர்னா இன் தீயே இல்லாத்ரெமெந்தா
க்வாந்தோ சேலிமோ வெந்தி சுந்த் எத் தெர்ரா
தும் வேனெரிஸ்யூதிக்காரே, சேக்குலும் பெர் இஞ்ஞெம்.
த்ரெ மென்ஸ் பாக்துஸ் சம் ஏகோ எத்தி மெயோ
தும் திஸ்க்கூஸ்சியோ வேனெரித்,
ஆத்க்வே வெந்த்தூரா ஈரா.
க்வாந்தோ சேலி மோவெந்தி சுந் எத் தெர்ரா.
தீயெஸ் இல்லா, தீயெஸ் ஈரே காலாமித்தாத்திஸ்
எத் மிசேரியே தீயேஸ் மாஞ்ஞா எத் ஆமாராவால்தே
தும்வேனெரிஸ் யூதிக்காரேசேக்குலும் பெர் இஞ்ஞெம்.
ரெக்குயியெம் ஏத்தெர்னாம் தோனா ஏயி (ஏயிஸ்)
தோமினே எத்லுக்ஸ் பெர்ப்பெத்துவா லூச்சேயாத்
ஏயி (ஏயிஸ்) லீபெரா...
கீரியே எலேயிசோன். க்றீஸ்தே எலேயிசோன்
கீரியே எலேயிசோன்.

குரு. பரலோக மந்திரம் சொல்லுகிறது.
பரி. எத் நே நோஸ் இந்தூக்காஸ் இந்தெந்தாத் ஸியோனெம்

குரு. செத் லீ பெரா நோஸ் ஆ மாலோ.
பரி. ஆ போர்த்தா இன்பேரி .

குரு. எருவே தோமினே, ஆனிமாம் ஏயுஸ்.
பரி. ரெக்குயியெஸ்காந்த் இன் பாச்சே.

குரு. ஆமென்.
பரி. தோமினே எக்ஸாவ்தி ஓராத்ஸியோனெம் மேயாம்.
பரி. எத் க்ளா மோர் மேயுஸ் அத் தே வேனியாத்.

குரு. தோமினுஸ் வோபிஸ்கும்.
பரி. எத் கும் ஸ்பீரித்து தூவோ .

குரு. ஓரே முஸ்... பெர்க்றீஸ்தும் தோமினும் நோஸ்த்ரும்.
பரி. ஆமென்.

குரு. ரெக்குய்யெம் ஏத்தெர்னாம் தோனா ஏயி (ஏயிஸ்) தோமினே
பரி. எத் லுக்ஸ் பெர்ப்பெத்துவாலூச்சேயாத் ஏயி (ஏயிஸ்)

குரு. ரெக்குயியெஸ்காந்த் இன் பாச்சே.
பரி. ஆமென்.