உன்னை நான் மறவேன் இயேசுவே நான் மறவேன் என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன்னை நான் மறவேன் இயேசுவே நான் மறவேன்

என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்

எந்நாளும் உன்னருளை நான் பாடி மகிழ்ந்திருப்பேன்


1. உன் நாமம் என் வாயில் நல்தேனாய் இனிக்கின்றது உன்

அன்பை நானும் எண்ணும் போது ஆனந்தம் பிறக்கின்றது


2. உன் வாயில் சொல்லமுதாய் எந்நாளும் வாழ்ந்திடுவேன் நல்

வாழ்வு நல்கும் வார்த்தையெல்லாம் நானிலம் முழங்கிடுவேன்


3. உன் மேனி பாய்ந்து வரும் செந்நீராய் நானிருப்பேன் பிறர்

வாழ்வு காண நானும் ஒருநாள் ஆறாய்ப் பாய்ந்திடுவேன்


4. என் ஆசை ஆயிரமாம் உன்னாலே நிறைவுபெறும் என்

பாசவலைகள் நாசகனிகள் உன்னால் அறுந்து விடும்


5. நல்மாலை வேளையிலே நலம் கூற எழும்மதி போல் என்

வாழ்வின் மாலை வந்திடும் போது எழுமதி நீயாவாய்