காணிக்கை கொண்டு வந்தேன் ஏழை என் காணிக்கை கொண்டு வந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கை கொண்டு வந்தேன்

ஏழை என் காணிக்கை கொண்டு வந்தேன்

என்னிடம் இருப்பதை உம்மிடம் கொண்டு வந்தேன்


1. உடலும் உயிரும் உமதே எந்தன் வாழ்வின் வடிவம் உமதே

உள்ளமும் மனமும் உமதே எந்தன் வாழ்வின் வளமை உமதே

படைப்பின் சிகரம் நானன்றோ

என்னைப் படைத்த தேவனே உம்மிடமே

தருகின்றேன் என்னையே காணிக்கையாக


2. அப்பமும் இரசமும் உமதே எந்தன் வாழ்வின் வலிமை உமதே

வழியும் பொருளும் நீயே எந்தன் வாழ்வின் பொருளும் நீயே

கரங்கள் விரித்து அழைக்கின்றாய்

என்னை அணைக்கும் தேவனே உம்மிடமே

தருகின்றேன் என்னையே காணிக்கையாக