வாழும் இறைவனை நான் உண்டேன் என் உள்ளம் மகிழ்வால் நிறைகின்றது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வாழும் இறைவனை நான் உண்டேன்

என் உள்ளம் மகிழ்வால் நிறைகின்றது


1. இயேசு சொன்னார்:

ஆன்ம உணவின் வளம் நானே

என் ஊனை நீங்கள் உண்டு வந்தால்

என் நித்திய வாழ்வைப் பெற்றிடுவீர்


2. இயேசு சொன்னார் :

அழிவை வெல்லும் உயிர் நானே

என் உயிரில் நீங்கள் பங்கு கொண்டால்

என் உயிர்ப்பையும் நீங்கள் பெற்றிடுவீர்


3. இயேசு சொன்னார் :

உலகம் தேடும் அமைதி நானே

என் அன்பை நீங்கள் பரப்பி வந்தால்

என் ஆட்சியின் சிறப்பை உணர்ந்திடுவீர்