கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே அனுதின மேய்ச்சலுடன் அன்புடன் நடத்துகின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே

அனுதின மேய்ச்சலுடன் அன்புடன் நடத்துகின்றார்


1. அவர் என் ஆத்துமாவை ஞானத்தினில் சேர்த்து

நீதியின் பாதைகளில் அவர் என்னை நடத்துகின்றார்


2. மரணத்தின் பள்ளத்திலும் பயத்திலும் நடந்தாலும்

தேவன் நம்மோடிருப்பார் நன்மைகள் புரிந்திடுவார்


3. எண்ணெயால் என் தலையை அன்புடன் அபிஷேகம் செய்து

திருச்சபை முன்பாக திருநிலைப் படுத்துகின்றார்