அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே இந்த பூலோகம் உந்தன் சொந்தமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே

இந்த பூலோகம் உந்தன் சொந்தமே

நீயில்லாமலே இந்த உலகம் நடக்கிறது

உன்னைக் கேட்காமலே இந்த இயற்கை வளர்கிறது

இந்த வானும் பூமியும் காற்றும் காலமும்

காசில்லாமல் வந்தது

யார் தந்தது தெரியுமா சொல் மனமே

இறைவன் இறைவன் இறைவன்

ஒருவன் அவனே தலைவன்


1. வாழும் பல ஆயிரம் உயிர்களின்

இரகசியம் அணுவினில் அமைத்தது யார்

நாளும் வரும் ஆதவன் ஒளியினில்

அகிலமும் வாழ்ந்திட அமைத்தது யார்

காற்று நடனமிடும் நாற்று

உயிரளிக்கும் ஊற்று என் மனம்

பாட்டு பல கலைகள் அழகு

வான்மழையின் அமுது என் மனம்

உலகெங்குமே உயிராற்றல்கள்

நீ உணர்ந்திடு உள்ளம் ஒளி பெறும்


2. விதையில் பெரும் விருட்சமும் அடங்கிடும்

அதிசயம் அமைத்தது யாரறிவு

மண்ணில் பல மகத்துவம் மனிதனும்

படைத்திட அமைத்தது யாரறிவு

மாசு நிறை உலகில் கேட்கும்

மனக்குரலின் சாட்சி என் மனம்

பாசம் மனிதகுல நேசம்

நீதியெனும் எண்ணம் எங்ஙனம்

இவை வென்றிட நிலை நின்றிட

எழும் குரல்களும் மக்கள் இயக்கமும்