அன்பின் இறைவா படைப்பின் தலைவா அடியோர் போற்ற வந்தோம் இயேசுவோடு எம்மையும் இணைத்து பலியாய் தரவந்தோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பின் இறைவா படைப்பின் தலைவா அடியோர் போற்ற வந்தோம்

இயேசுவோடு எம்மையும் இணைத்து

பலியாய் தரவந்தோம்


1. அனைத்துப் பொருளும் அடியோர் எமக்காய்

அளித்த அருட்பெருக்கே

நிலத்தின் விளைவும் மனித உழைப்பும்

நிறைந்த அப்பமிதோ

வாழ்வை அளிக்கும் அப்பமாய் மாற

வரத்தை வேண்டி நின்றோம்


2. அனைத்துப் பொருளும் அடியோர் எமக்காய்

அளித்த அருட்பெருக்கே

திராட்சைக் கொடியும் மனித உழைப்பும்

திரண்ட இரசம் இதோ

ஆன்ம வாழ்வின் பானமாய் மாற

அருளை வேண்டி நின்றோம்